கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 7 அணிகளுக்காக ஆடியது சாதனையா? சங்கடத்தில் ஆரோன்பிஞ்ச் + "||" + IPL Has it been played for 7 teams in cricket? Inconvenience Arron Finch

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 7 அணிகளுக்காக ஆடியது சாதனையா? சங்கடத்தில் ஆரோன்பிஞ்ச்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 7 அணிகளுக்காக ஆடியது சாதனையா? சங்கடத்தில் ஆரோன்பிஞ்ச்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 7 அணிகளுக்காக ஆடியது சாதனையா என ஆரோன் பிஞ்ச் விளக்கம் அளித்துள்ளார்.
மொகாலி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் 31 வயதான ஆரோன் பிஞ்ச், இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார். இது அவர் விளையாடும் 7-வது ஐ.பி.எல். அணியாகும். இதன் மூலம் ஐ.பி.எல்.-ல் 7 அணிகளுக்காக கால்பதித்த முதல் வீரர் என்ற சிறப்பை பிஞ்ச் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ் ஆகிய அணிகளுக்காகவும் விளையாடி இருக்கிறார்.


இது குறித்து ஆரோன் பிஞ்ச் அளித்த ஒரு பேட்டியில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த சாதனை (அதிக அணிகளுக்காக ஆடியவர்) எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாகவே இருக்கிறது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக நான் மாற்று வீரராக சேர்க்கப்பட்டேன். அந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே விளையாடினேன். இதே போன்று தான் 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காக மாற்று வீரராக இடம் பிடித்து கேப்டனாகவும் செயல்பட்டேன். எனவே இந்த இரண்டையும் எண்ணிக்கையில் சேர்க்காமல் விட்டு விடுங்களேன். அதனால் 7 அணிகளில் விளையாடியிருக்கிறேன் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார். இந்த சீசனில் இதுவரை ஆடியுள்ள 2 ஆட்டத்திலும் ஆரோன் பிஞ்ச் டக்-அவுட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல் கிரிக்கெட்: பஞ்சாப்பின் கனவை தகர்த்து சென்னை அணி 9-வது வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. #IPL2018 #CSKVsKXIP
2. ஐ.பி.எல் கிரிக்கெட்: ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற்றம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தை பதம் பார்த்து கொல்கத்தா அணி ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது.
3. ஐ.பி.எல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற்றது. #IPL2018
4. ஐ.பி.எல் கிரிக்கெட்; ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி 7-வது வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.