கிரிக்கெட்

ஐ.பி.எல். 2018: கொல்கத்தா அணிக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி + "||" + ipl 2018: Kolkata Knight Riders need 161 runs to win

ஐ.பி.எல். 2018: கொல்கத்தா அணிக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

ஐ.பி.எல். 2018: கொல்கத்தா அணிக்கு 161 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி
11-வது ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தாவிற்கு 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிா்ணயித்துள்ளது. #IPL2018 #RR #KKR
ஜெய்ப்பூர்,

11-வது ஐ.பி.எல். போட்டியின் 15வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூாில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைப்பெற்றது. முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காா்த்திக் முதலில் பந்து வீச்சை தோ்வு செய்தாா். இதனால் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டகாரா்களான ரஹானேவும் டி.ஆர்.சி ஷார்ட்டும் இணைந்து சிறப்பான தொடக்கத்தை கொடுக்க, சிறிது நேரத்திலேயை ரஹானே 36 ரன்கள் எடுத்து வெளியேறினாா்.

பின்னா் களமிறங்கிய இளம்வீரா் சாம்சன் 7 ரன்களிலேயே பெவிலியன் திரும்ப, அதன் பின்னா் வந்த ராகுல் திரிபாதி ஆட்டத்தை தொடங்குற்கு முன்பே டி.ஆர்சி ஷார்ட்டும் 44(43)  அவுட்டாகி வெளியாகினாா்.  

இதனால் ரசிகா்கள் அனைவரும் அதிா்ச்சியில் மூழ்கினா். பின்னா் களமிறங்கி அனைத்து வீரா்களும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறினா். இதனால் பென் ஸ்டோக்ஸ்14(11),  கிருஷ்ணப்பா கவுதம் 12(7) , ஷ்ரேயாஸ் கோபால் 0(1), தவால் குல்கர்னி3(3) , ஜெய்தேவும் 0(0) ஜோஸ் பட்லரும் 24(18) ஆடுகளத்தில் நாட் அவுட்டாக இருந்தனா். 

இந்நிலையில்  ராஜஸ்தான் அணி கொடுக்கப்பட்ட 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்களை எடுத்தது. கொல்கத்தா தரப்பில் நித்திஷ் ராணா மற்றும் டாம் குர்ரான் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா். சுனில் நரேன்,குல்தீப் யாதவ், சிவம் மாவி ஆகியோா் தலா 1 விக்கெட்டுகளை எடுத்துள்ளனா். 

கொல்கத்தாவிற்கு 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.