கிரிக்கெட்

முகமது ஷமியிடம் 3 மணி நேரம் விசாரணை + "||" + 3 hours trial with Mohammed Shami

முகமது ஷமியிடம் 3 மணி நேரம் விசாரணை

முகமது ஷமியிடம் 3 மணி நேரம் விசாரணை
கிரிக்கெட் வீரர் முகமது ஷமியிடம் 3 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
கொல்கத்தா,

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை சித்ரவதை செய்ததாக அவரது மனைவி ஹசின் ஜஹன் கொல்கத்தா போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி முகமது ஷமிக்கு, கொல்கத்தா போலீசார் சம்மன் அனுப்பினர். நேரில் ஆஜராகுவதற்கு தனது வக்கீல்கள் மூலம் அவகாசம் கேட்க முதலில் திட்டமிட்டிருந்த முகமது ஷமி, பிறகு அவரே நேற்று கொல்கத்தா போலீசில் ஆஜரானார். அவரிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் இணை கமிஷனர் பிரவீன் திரிபாதி, ‘ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முகமது ஷமி டெல்லி அணியுடன் இணைவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஆனால் தேவைப்பட்டால் அவரை மீண்டும் விசாரணைக்கு அழைப்போம்’ என்றார். ஷமியின் மூத்த சகோதரர் ஹசிப் அகமதுவிடமும் தனியாக விசாரணை நடத்தப்பட்டது.