கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லாங்கர்? + "||" + Australian team coach Langer?

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லாங்கர்?

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் லாங்கர்?
ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக லாங்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கியதை தொடர்ந்து அணியின் தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் புதிய பயிற்சியாளரை தேடும் பணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நாளை தொடங்க உள்ளது. அதே நேரத்தில் முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலிய அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட இருப்பதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 47 வயதான லாங்கர், பிக்பாஷ் கிரிக்கெட்டில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியரின் தேர்வுகள்...