கிரிக்கெட்

பந்து தாக்கி இஷான் கிஷன் காயம்: வருத்தம் தெரிவித்தார், பாண்ட்யா + "||" + Ishant Kishan injured in ball blast: Sad to say, Pandya

பந்து தாக்கி இஷான் கிஷன் காயம்: வருத்தம் தெரிவித்தார், பாண்ட்யா

பந்து தாக்கி இஷான் கிஷன் காயம்: வருத்தம் தெரிவித்தார், பாண்ட்யா
பந்து தாக்கி இஷான் கிஷன் காயம் ஏற்படுத்தியதற்கு பாண்ட்யா வருத்தம் தெரிவித்தார்.
மும்பை,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் 13-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா பீல்டிங் செய்து தூக்கி எறிந்த பந்து, எதிர்பாராதவிதமாக மும்பை விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் முகத்தை பதம் பார்த்தது. வலது கண் அருகில் பந்து தாக்கியதில் அந்த பகுதி சிவந்து போனது. வலியால் துடித்த அவர் சிகிச்சைக்கு பிறகு வெளியேறினார்.


மாற்று விக்கெட் கீப்பராக ஆதித்ய தாரே செயல்பட்டார். இந்த சம்பவத்துக்கு டுவிட்டர் மூலம் இஷான் கிஷனிடம் வருத்தம் தெரிவித்துள்ள ஹர்திக் பாண்ட்யா, வலுவாக வருவீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இஷான் கிஷனின் காயம் பயப்படும்படி இருப்பது போல் தோன்றவில்லை. மும்பை அணியின் அடுத்த ஆட்டத்திற்கு 3-4 நாட்கள் இருக்கிறது. அதற்குள் அவர் சரியாகிவிடுவார் என்று நம்புகிறேன்’ என்றார்.

ஆசிரியரின் தேர்வுகள்...