ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம்-கபில்தேவ்


ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம்-கபில்தேவ்
x
தினத்தந்தி 21 April 2018 9:45 PM GMT (Updated: 21 April 2018 7:52 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் லெக்ஸ்பின்னர்கள் ஆதிக்கம் அதிகம் என கபில்தேவ் தெரிவித்தார்.

டெல்லி,

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு பந்து வீச்சாளர்களும் பந்து வீச்சு முறையை மாற்றி கொள்கிறார்கள். ஐ.பி.எல். போட்டி தொடங்கியது முதல் தற்போதைய ஐ.பி.எல். போட்டி வரை எனக்கு தெரிந்தவரை மற்றவர்களை விட லெக்ஸ்பின்னர்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். ஒவ்வொரு அணியிலும் லெக்ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் ஆப்-ஸ்பின்னராக இருந்தாலும், லெக்ஸ்பின் அதிகம் வீசுவதற்கு மாறி விட்டார். இதன் மூலம் லெக்ஸ்பின் தான் வெற்றிகரமான பந்து வீச்சாக மாறி வருகிறது என்பதை அறியலாம். கடந்த 100 ஆண்டுகளாக கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் ஆட்டமாகவே இருந்து வருகிறது. ஒருபோதும் பந்து வீச்சாளர்களுக்கான ஆட்டமாக மாறவில்லை. 20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன்கள் மட்டுமின்றி பந்து வீச்சாளர்களும் தங்களது திறமையை வளர்த்து கொள்ள நல்ல வாய்ப்பாகும்’ என்றார்.

Next Story