கிரிக்கெட்

ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வார்னே + "||" + Warne apologized to Rajasthan fans

ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வார்னே

ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வார்னே
ராஜஸ்தான் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் ஷேன் வார்னே.
ராஜஸ்தான்,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சிடம் படுதோல்வி அடைந்தது. தோல்விக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகர் ஷேன் வார்னே தங்கள் அணியின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் ராஜஸ்தான் அணியின் மோசமான செயல்பாடுகளுக்கான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சரிவில் இருந்து நல்ல நிலைக்கு திரும்ப வீரர்கள் முயற்சித்து வருகிறார்கள். எனவே ரசிகர்கள் நம்பிக்கை இழக்காமல் பொறுமையாக இருக்க வேண்டும். அடுத்த 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நாங்கள் நல்ல நிலைமைக்கு திரும்புவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. நடத்தை விதிகள் மீறல்: தேர்தல் கமி‌ஷனிடம் மன்னிப்பு கேட்டார், இம்ரான்கான்
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான்கான் 5 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.