கிரிக்கெட்

2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்-ஷேவாக் + "||" + India will win the World Cup in 2019 - Shewag

2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்-ஷேவாக்

2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வெல்லும்-ஷேவாக்
2019-ம் ஆண்டு உலக கோப்பையை இந்திய அணி வெல்லும் என ஷேவாக் தெரிவித்தார்.
கொல்கத்தா,

கொல்கத்தாவில் விளம்பர நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் அளித்த பேட்டியில், ‘நம்மிடம் உள்ள ஒருநாள் கிரிக்கெட் அணியை பார்க்கையில் 2019-ம் ஆண்டு உலக கோப்பையை நாம் தான் வெல்வோம். அதனை நம்பமாட்டீர்களா?. நிச்சயம் நமக்கு தான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் தற்போதைய இந்திய அணி, வெளிநாட்டில் டெஸ்ட் போட்டி தொடரை வெல்லும் திறன் கொண்டுள்ளது. அதற்குரிய பவுலிங் மற்றும் பேட்டிங் நம்மிடம் இருக்கிறது. தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்வதை மயிரிழையில் தவறவிட்டோம். இல்லையெனில் வரலாறு படைத்து இருப்போம்.


 நாங்கள் விளையாடிய நாட்களில் ஸ்ரீநாத், ஜாகீர்கான், அகர்கர், நெஹரா ஆகிய 4 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் 2003-ம் ஆண்டு உலக கோப்பை தவிர 4 பேரும் ஒரே நேரத்தில் சேர்ந்து விளையாட முடிந்ததில்லை. தற்போதைய அணி எந்த சூழலிலும் சிறப்பாக செயல்படும் திறமை படைத்ததாகும். ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் இருவரும் இருக்கிறார்களா? இல்லையா? என்பது பிரச்சினை இல்லை. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஆஸ்திரேலிய தொடரை இந்திய அணி வெல்லும். தொடக்க ஆட்டக்காரராக விளையாட எனக்கு வாய்ப்பு அளித்தவர் கங்குலி தான். எனக்காக அவர் தனது இடத்தை விட்டுக்கொடுத்தார். அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளேன்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. “ஷேவாக்கை நடுங்க வைத்த பவுலர்” - அவரே வெளியிட்ட ருசிகர தகவல்
இந்திய முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், தன்னை நடுங்க வைத்த ஒரே பவுலர் சோயிப் அக்தர் தான் என்று கூறியிருக்கிறார்.
2. தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள்: பிபா தகவல்
தாய்லாந்து சிறுவர்கள் கால்பந்து இறுதி போட்டியைக் காண அழைத்து வரப்படமாட்டார்கள் என்று பிபா தெரிவித்துள்ளது. #FIFA
3. உலக கோப்பையில் அதிக வயதில் களம் இறங்கி எகிப்து வீரர் சாதனை
உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக வயதில் களம் இறங்கி எகிப்து வீரர் சாதனை படைத்துள்ளார்.
4. கபடி விளையாடி உலக கோப்பை தொடருக்கு தயாராகும் இங்கிலாந்து கால்பந்து வீரர்கள்
இங்கிலாந்து கால்பந்து வீரர்கள், தங்கள் பயிற்சிக்கு இடையே கபடி விளையாடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.