கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு + "||" + Hyderabad won the toss and elected to bowl first

ஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல்: சென்னைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு
11வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. #IPL
ஐதராபாத்,

11 வது ஐபிஎல் போட்டியின் 20வது லீக் ஆட்டம் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. 

சென்னை அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தானுக்கு எதிராக), ஒன்றில் தோல்வியும்(பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது.

அதே போல் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 3 வெற்றிகளையும், ஒரு தோல்வியும் அடைந்து 6 புள்ளிகளுடன் உள்ளது.

இந்நிலையில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.