கிரிக்கெட்

ராஜஸ்தான்- மும்பை அணிகள் பலப்பரீட்சை தொடங்கியது + "||" + Mumbai rajastan teams started showdown

ராஜஸ்தான்- மும்பை அணிகள் பலப்பரீட்சை தொடங்கியது

ராஜஸ்தான்- மும்பை அணிகள்  பலப்பரீட்சை தொடங்கியது
ஐ.பி.எல்-ன் 21 வது லீக் போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தோ்வு செய்துள்ளது. #IPL2018
ஜெய்பூா்,

11வது ஐபிஎல் போட்டியின் 21வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு ஆட்டமாக தொடங்கிய இந்த போட்டியில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணியுன்  கேப்டன் ரோகித் சா்மா பேட்டிங்யை தேர்வு செய்துள்ளாா்.

நடப்பு சாம்பியன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. முதல் 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்று இருந்த மும்பை அணி, பெங்களூருவை சாய்த்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.  

அதே சமயம் அடுத்தடுத்து இரு ஆட்டங்களில் தோல்வியை தழுவிய ராஜஸ்தான் அணி சொந்த மண்ணில் எழுச்சி பெற வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை சந்தித்த 16 ஆட்டங்களில் 6-ல் ராஜஸ்தானும், 10-ல் மும்பையும் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகள் கூட்டணி
ராஜஸ்தானில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்பட 7 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.
2. ராஜஸ்தானில் ராணுவ வீரர்களுடன் தசரா விழாவை கொண்டாடுகிறார், ராஜ்நாத் சிங்
ராஜஸ்தானில் ராணுவ வீரர்களுடன் தசரா விழாவை ராஜ்நாத் சிங் கொண்டாட உள்ளார்.
3. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது.
4. ராஜஸ்தானில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு அறிகுறி : அறிக்கை அளிக்க பிரதமர் அலுவலகம் உத்தரவு
ராஜஸ்தானில் 22 பேர் ஜிகா வைரஸ் பாதிப்புடன் அறிகுறியுடன் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
5. மருமகளுக்கு சிறுநீரகம் தானம் கொடுத்த மாமியார்
பெண்ணுக்கு சிறுநீரகம் தர அவரின் பெற்றோர் மறுத்த நிலையில் மாமியார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.