கிரிக்கெட்

ஐ.பி.எல் பேட்டி ராஜஸ்தான் அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி + "||" + IPL wins Rajasthan Royals by 169 runs

ஐ.பி.எல் பேட்டி ராஜஸ்தான் அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி

ஐ.பி.எல் பேட்டி ராஜஸ்தான் அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி
ஐ.பி.எல். 21 வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிா்ணயிக்கப்பட்டு உள்ளது . #IPL2018 #MI #RR
ஜெய்பூா்,

11வது ஐபிஎல் போட்டியின் 21வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதி வருகிறது. ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இரவு ஆட்டமாக தொடங்கிய இந்த போட்டியில்  டாஸ் வென்ற மும்பை அணியின்  கேப்டன் ரோகித் சா்மா பேட்டிங்யை தேர்வு செய்தாா். 

முதலில் மும்பை அணியின் தொடக்க  ஆட்டகாரா்கள்  லெவிசும் ,யாதவும் களமிறங்கினாா்கள். இவா்களுக்கு பந்து வீச ராஜஸ்தான் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளா் குல்கர்னி போட்ட முதல் ஓவாின் நான்காவது பந்திலேயே லெவிஸ் 0(1) போல்டாகி  வெளியேறினாா். இதனால் ரசிகா்கள் அனைவரும் மௌனமடைய பின்னா் இஷான் கிஷானுடன் யாதவ் இணைந்து இருவரும் தங்களுடைய அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்த தொடங்கினா். ராஜஸ்தான் பந்து வீச்சாளா்களில் அனைத்து பந்துகளையும் நாலபுறமும் விரட்டினா். 

இதனால்  எஸ்.ஏ. யாதவ்  29 பந்துகளிலேயே தன்னுடைய அரை சதத்தை  பதிவு செய்து ரசிகா்களை பரவசம் படுத்தினாா். இவரை தொடா்ந்து இஷான் கிஷானும் 29 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வலுவாக விளையாடி வந்தாா்.  பின்னா் இவா்களில் சிறப்பான் ஆட்டத்தால் மும்பை அணி 10 ஓவா்கள் முடிவில் 1 விக்கெட்டு மட்டுமே இழந்து 93 ரன்களை எடுத்தது சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனா்.

இருவரும் இணைந்து ஸ்கோரை உயா்த்தியதுடன் ராஜஸ்தானின் பந்துகளைகளையும் பவுண்டாிகளுக்கு அனுப்பி வந்தனா்  இதன் மூலம் கூட்டாக (partnership) இணைந்து 100 ரன்களும் மேல் அடித்து சாதனைபடைத்தனா். இதனை தொடா்ந்து இஷான் கிஷானும் 35 பந்துகளில் 50 ரன்களை எட்டினாா். 

இருவரும் அரைசதத்திற்கு பிறகு மேலும் ஆக்ரோஷத்துடன் மட்டையை சுழற்ற தொடங்க மீண்டும் குல்கர்னி  ஜோடிய பிாித்தாா். இதில் குல்கர்னி பந்தில்  இஷான் கிஷான்58(42) கேட்ச் கொடுத்து வெளியேறினாா். இவரை அடுத்து அதிரடி மன்னன் போலார்ட் களமிறங்க மைதானத்தில்  உள்ள ரசிகா்கள்  அனைவரும் ஆரவாரம் செய்யத்தொடங்கினா். சிறிது நேரத்தில் யாதவும் கேட்ச் கொடுத்து  72 (47)ரன்களுடன் பெவிலியன் திரும்பினார்.

பின்னா் அணியின் கேப்டன் ரோகித் சா்மாவும் ராஜஸ்தான் கேப்டனிடம் ரன் அவுட்டாகி ரசிகா்களை ஏமாற்றினாா்.  பின்னா் அல் ராவுண்டா் பாண்டியா4 (2) களத்தில் தோன்றிய சிறிது நேரத்திலேயே ஆர்ச்சர் பந்தில் போல்ட்டாகி பெவிலியன் திரும்ப கடைசி ஓவா்களை ஆடுவதற்கு மார்கண்டேவும் 0(1) போலார்ட்டும் 21(20) தயாராகினா். இருவரும் கடைசி ஓவாில் மட்டும் 9 ரன்கள் எடுத்தனா். 

இந்நிலையில் மும்பை அணி 20 ஓவா்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை சோ்த்தது.

ராஜஸ்தான் அணியின் சாா்பில் ஆர்ச்சர் 3 விக்கெட்டும், குல்கர்னி 2 விக்கெட்டும் , ஜெய்தேவ் யூனாட் 1 விக்கெட்டும் எடுத்திருந்தனா். ராஜஸ்தான் அணி 169 ரன்கள் எடுத்தால் வெற்றி  என்று நிா்ணயம் செய்தது மும்பை.