கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை தேவையா? தினேஷ் கார்த்திக் கேள்வி + "||" + IPL cricket, the Duckworth-Lewis Need Regulation? Dinesh Karthik questioned

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை தேவையா? தினேஷ் கார்த்திக் கேள்வி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை தேவையா? தினேஷ் கார்த்திக் கேள்வி
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை தேவையா என தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பி உள்ளார்.
கொல்கத்தா,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில், ‘டக்வொர்த்-லீவிஸ்’ விதிமுறை தேவையா? என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ‘ஈடன்கார்டனில் நடந்த எங்கள் அணிக்கு (கொல்கத்தா) எதிரான ஆட்டத்தில் 192 ரன்கள் இலக்கை நோக்கி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆடியது. அந்த அணி 8.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது பஞ்சாப் அணியின் வெற்றிக்கு ஓவருக்கு 8 ரன்கள் வீதம் தேவைப்பட்டது.

ஆனால் மழை ஓய்ந்து டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி இலக்கு மாற்றி அமைக்கப்பட்ட போது அவர்களுக்கு திடீரென ஓவருக்கு 6 ரன் வீதமே தேவையாக இருந்தது. அதாவது சராசரியாக ஒரு பந்துக்கு ஒரு ரன் வீதமே தேவைப்பட்டது. இது எப்படி என்றே புரியவில்லை. டக்வொர்த்-லீவிஸ் விதிமுறை இன்னும் நிறைய பேருக்கு குழப்பமாகவே இருக்கிறது. இந்தியாவில் நடக்கும் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் மழையால் குறுக்கிடும் போது, இந்திய விதிமுறையான ‘விஜேடி’ முறை பின்பற்றப்படுகிறது. அதையே ஏன் வருங்காலத்தில் ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் பயன்படுத்துவது குறித்து சிந்திக்கக்கூடாது?’ என்றார்.