கிரிக்கெட்

ஐபிஎல்: டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது + "||" + The Delhi Daredevils team lost by four runs by Punjab

ஐபிஎல்: டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது

ஐபிஎல்: டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது
11-வது ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது. #IPL #DelhiDareDevils
டெல்லி,

11-வது ஐபிஎல் போட்டித்தொடரின் 22-வது லீக் ஆட்டத்தில் கவுதம் கம்பீர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் இன்று மோதின.

இந்தப்போட்டியில் டாஸ் வென்ற கவுதம் கம்பீர் தனது அணி முதலில் பந்து வீசும் என்று அறிவித்தார்.  இதன்படி, பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. பஞ்சாப் அணியில் வியக்கத்தக்க வகையில் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெயில் நீக்கப்பட்டு ஆரோன் பிஞ்ச் சேர்க்கப்பட்டு இருந்தார். துவக்க ஆட்டக்காரர்களாக ஆரோன் பிஞ்சும் கே.எல். ராகுலும் களம் இறங்கினர். 

இந்த ஜோடி, பஞ்சாப் அணியின் வழக்கான அதிரடியை வெளிக்காட்ட தடுமாறியது. பிஞ்ச் 2 (ரன்கள்) கே.எல்.ராகுல் (21 ரன்கள்), மயங்க் அகர்வால் ( 21 ரன்கள்), என சீரான இடைவெளியில் விக்கெட்டை பறிகொடுத்தனர். கருண் நாயர் (34 ரன்கள், 32 பந்துகள்) கணிசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 யுவராஜ்சிங் (14 ரன்கள்) ஏமாற்றம் அளித்தார். டேவிட் மில்லர் 26 ரன்களில் வெளியேறினார். கேப்டன் அஷ்வின் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் சேர்த்தது.  இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ப்ரித்வி ஷாவ் மற்றும் கேப்டன் கவுதம் கம்பீர் களம் இறங்கினர். 

இந்நிலையில் பஞ்சாப் அணியினரின் நேர்த்தியான பந்து வீச்சால் டெல்லி அணியினர் ஆரம்பம் முதலே ரன்களை சேர்க்க திணறினர். அணியின் ஸ்கோர் 25 ஆக இருக்கும் போது ப்ரித்வி ஷாவ், ராஜ்பூட் வீசிய பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். அதன் பிறகு கவுதம் கம்பீர்(4 ரன்கள்), மேக்ஸ்வெல் (12 ரன்கள்), ரிஷாப் பாண்ட்(4ரன்கள்)  என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும், மறுமுனையில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் பொறுப்புடன் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தார். அவருடன் டெல்லி அணியின் மற்றொரு வீரரான ராகுல் திவேதியா இணைந்து அணியின் ரன் விகிதத்தை முன்னேற்ற உறுதுணையாக இருந்தார். 

ஆட்டத்தின் 17 வது ஓவரின் இறுதிப்பந்தில் ராகுல் திவேதியா 24 ரன்களில் ஆண்ட்ரூ டை பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேற, அடுத்து களமிறங்கிய ப்ளன்கெட் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார். இந்நிலையில் கடைசி 6 பந்துகளில் டெல்லி அணி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. முஜீப் அர் ரஹ்மான் வீசிய கடைசி ஓவரை எதிர்கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் 5 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். கடைசி 1 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் (57 ரன்கள்) தூக்கி அடித்த பந்து ஆரோன் பிஞ்ச்யிடம் சிக்கியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. இதனிடையே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அன்கிட் ராஜ்பூட், ஆண்ட்ரூ டை மற்றும் முஜீப் அர் ரஹ்மான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனிடையே நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 23-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது சொந்த மண்ணில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.