கிரிக்கெட்

சச்சின் பிறந்தநாளில் சர்ச்சை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் டுவீட் + "||" + Sachin Tendulkar fans were left fuming after Cricket Australia posted sneaky birthday wish for Damien Fleming.

சச்சின் பிறந்தநாளில் சர்ச்சை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் டுவீட்

சச்சின் பிறந்தநாளில் சர்ச்சை ஏற்படுத்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் டுவீட்
சச்சின் தெண்டுல்கர் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கொண்டாடி வரும் நிலையில், அவர்களை கடுப்பேற்றும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒரு டுவீட் செய்துள்ளது. #SachinTendulkar
கிரிக்கெட் உலகின் கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் இன்று தனது 45-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.அவரது ரசிகர்கள்  சச்சினின் ஸ்பெஷல் ஷாட், பெஸ்ட் கேட்ச், புகைப்படம் என தங்களது மகிழ்ச்சியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேமியன் பிளம்மிங்கும் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் டேமியன் பிளம்மிங்-க்கு தெரிவித்துள்ள வாழ்த்துப்பதிவு தெண்டுல்கர் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

டேமியன் பிளம்மிங் பந்துவீச்சில் தெண்டுல்கர் அவுட்  ஆகும் பழைய கிரிக்கெட் மேட்ச் ஒன்றின் வீடியோவை பதிவிட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் டேமியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய  கிரிக்கெட் வாரியத்தின் இந்த விஷம பதிவுக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய  கிரிக்கெட் வாரியம் பதிவிட்ட வீடியோவுக்கு கீழே ஆஸ்திரேலிய அணியை சச்சின் புரட்டியெடுத்த பல இன்னிங்ஸ்களின் வீடியோவை பதிவிட்டு இந்திய ரசிகர்கள் தங்களது பதிலை அளித்துள்ளனர்.