கிரிக்கெட்

ஐபிஎல்: 31 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது மும்பை அணி + "||" + Sunrisers Hyderabad won by 31 runs

ஐபிஎல்: 31 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது மும்பை அணி

ஐபிஎல்: 31 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது மும்பை அணி
11-வது ஐபிஎல் போட்டியில் 23-வது லீக் ஆட்டத்தில் 31 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்ந்தது. #IPL
மும்பை, 

ஐ.பி.எல். -20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் 23-வது லீக் ஆட்டத்தில்  மும்பை இந்தியன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் மோதிக்கொண்டன.

இதில் டாஸ் வென்ற  மும்பை அணியின் கேப்டன் ரோகித் சா்மா முதலில் எதிரணியை பேட்டிங் செய்ய பணித்தார். இதன்படி, களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரா்களான தவானும் கேப்டன் வில்லியம்சனும் களம் இறங்கினர்.  ஜஸ்பிரித் பும்ராவின் முதல் ஓவரிலேயே வில்லியம்சன் 2 பவுண்டரிகளை அடித்து தங்கள் அணியின் ரன் கணக்கை தொடங்கி வைத்தார். மறுபுறம்  தவானுக்கு  5 ரன்கள் (6 பந்துகள் ) ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.  விருத்திமான் சஹா 0(2 பந்துகள் ) இரண்டு பந்து மட்டும் பிடித்த நிலையில் கீப்பா் கையில் கேட்ச் கொடுத்து அவரும் பெவிலியன் திரும்பினார். இதனால் மும்பை அணி ரசிகா்கள் அனைவரும ஆரவாரம் செய்தனா்.    

இவா்களுக்கு அடுத்து மனிஷ் பாண்டே 16 ரன்கள் (11பந்துகள் ) கேப்டன் வில்லியம்சனுடன் கைக்கோர்த்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி நிலையில், இவா்களின் முயற்சியை ஹர்திக் பாண்ட்யா கனவாக்கினார். பின்னா் ஐதராபாத்தின் ஆல் ரவுண்டா் ஷகிப் அல்-ஹசன் களத்தில் பிரேவேசிக்க  சூர்யகுமார் கையில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இவா்களுக்கு அடுத்து அதிரடி மன்னா் யூசுப் பதான் இறங்கி விளையாடி வந்தநிலையில், ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேப்டன் வில்லியம்சன் 29(21 பந்துகள்) கீப்பா் கையில் கேட்ச் கொடுத்து ரசிகா்களை ஏமாற்றினார். பின்னா் களமிறங்கிய முஹமதும் 17 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் மார்கண்டே பந்தில் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

மறுபுறம் யூசுப் பதான் மட்டும் தன் விக்கெட்டை கொடுக்காமல் தாக்குபிடித்தார். ஒரு விக்கெட் மட்டுமே மீதம் இருந்ததால் பேட்டை சுழற்சிய யூசுப் பதான் சிக்சர் ஒன்றை பறக்கவிட்டார். சோர்ந்து போயிருந்த ஐதராபாத் ரசிகர்களுக்கு லேசான ஆறுதலை இந்த சிக்சர் அளித்தது. ஆனால், அடுத்த பந்திலேயே யூசுப் பதான் (29 ரன்கள், 33 பந்துகள்) ஆட்டமிழந்தார். இதனால் 18.4 ஓவர்கள் விளையாடிய ஐதராபாத் அணி 118 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 

பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ் மற்றும் எவின் லீவிஸ் ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில் ஆரம்பம் முதலே ஐதராபாத் அணியினர் சிறப்பான முறையில் பந்து வீசி வந்ததால், ரன்கள் சேர்க்க தவறிய மும்பை இந்தியன்ஸ் அணியினர் தங்களது விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். அதன்படி எவின் லீவிஸ் (5 ரன்கள்), இஷான் கிஷன் (டக் அவுட்), கேப்டன் ரோகித் சர்மா (2 ரன்கள்) என மூன்று பேரும் ஒற்றைஇலக்க ரன்களிலேயே நடையை கட்டினர். இந்நிலையில் வெறும் 21 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்த மும்பை இந்தியன்ஸ் அணியை தொடக்க ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் குர்ணல் பாண்ட்யா ஆகியோர் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர்.

மும்பை அணி 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மிகவும் பொறுமையுடன் ஆடி வந்த இந்த ஜோடி பிரிந்தது. ரஷித்கான் வீசிய சுழற்பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆகி குர்ணல் பாண்ட்யா (24 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கீரன் பொல்லார்ட் (9 ரன்கள்) தன் பங்குக்கு ஒரு சிக்சர் அடித்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் 14-ம் ஓவரின் 5 வது பந்தில் நிதானமாக ஆடி வந்த சூர்யகுமார் யாதவும் (34 ரன்கள்)  ஆட்டமிழக்க 77 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து மும்பை இந்தியன்ஸ் அணி பறிதவித்தது. இதன் பின்னர் களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி உறுதி செய்யப்பட்டது. அதன்படி 18.5 ஓவர்களிலேயே 87 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மிகவும் அற்புதமாக பந்து வீசிய ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் கடைசி 4 ஒவர்களில் வெறும் 10 ரன்களை விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அந்த அணியில் சிதார்த் கவுல் 3 விக்கெட்டுகளையும், பாஷில் தம்பீ மற்றும் ரஷித் கான் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி ஐதராபாத் அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இது 5-வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாளை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மோதுகின்றன.