கிரிக்கெட்

ஒரே மாடலில் டி-ஷர்ட்டில் கலக்கும் விராட் கோலி மனைவி அனுஷ்கா + "||" + Virat and Anushka spotted wearring the same t-shirt

ஒரே மாடலில் டி-ஷர்ட்டில் கலக்கும் விராட் கோலி மனைவி அனுஷ்கா

ஒரே மாடலில்  டி-ஷர்ட்டில் கலக்கும் விராட் கோலி  மனைவி  அனுஷ்கா
ஒரே மாடலில் கருப்பு டி-ஷர்ட்டில் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் கலக்கி வருகின்றனர். #Virat #Anushka
பெங்களூர்

11-வது ஐ.பி.எல் சீஸனின் 24-வது லீக் போட்டியில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி துவங்குகிறது. 

சென்னை அணி, ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்று, 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. பெங்களூரு ஐந்து ஆட்டங்களில் இரண்டு வெற்றி பெற்று, 4 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னேற இன்றைய போட்டியில் கடுமையாக போட்டியிடும். 

விராட் கோலி, டி20 கேப்டனாக தனது 100-வது போட்டியில் இன்று களமிறங்க இருக்கிறார். 100-வது போட்டியில் கேப்டனாக களமிறங்கும் மூன்றாவது இந்திய வீரர் விராட். முதலிடத்தில் தோனி (244), இரண்டாவது இடத்தில் கவுதம் கம்பிர் (170) உள்ளனர். ஒட்டுமொத்தமாக விராட் எட்டாவது இடத்தில் உள்ளார். 

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் விராட் பற்றிய புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது. அவரும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா சர்மா அணிந்த ஆடை தான். இந்த நட்சத்திர ஜோடிக்கு கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் முடிந்தது. 

அனுஷிமா சர்மா, விராட் போல் உடை அணிந்து உலகத்தை உலா வருவது புதிதல்ல. ஏற்கனவே அவரது ஜெர்சியை அணிந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தார். தற்போது அதே போல் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. விராட், ஜிம்மில் ஒரு கறுப்பு டி-ஷர்ட் அணிந்து உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் வெளியானது. மறுப்பக்கம் அதே போன்ற டி-ஷர்ட் அணிந்து விமான நிலையத்தில் அனுஷ்கா காணப்படும் புகைப்படமும் வெளியிடப்பட்டது. சரி, இதில் என்ன இருக்கிறது என்று கேட்காதீர்கள். இது தான் ரிலேஷன்ஷிப் கோல் என்கிறார்கள் ரசிகர்கள். 


ஆசிரியரின் தேர்வுகள்...