பெங்களூரு அணிக்கு பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம்


பெங்களூரு அணிக்கு  பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம்
x
தினத்தந்தி 25 April 2018 3:33 PM GMT (Updated: 25 April 2018 3:33 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 24வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி பேட்டிங்கில் சிறப்பான தொடக்கத்தை தொடங்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #IPL #CSK #RRB

 பெங்களூரு, 

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்  நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத்துக்கு எதிராக) ஒன்றில் தோல்வியும் (பஞ்சாப்புக்கு எதிராக) கண்டுள்ளது. பெங்களூரு  அணி 5 ஆட்டங்களில் 2-ல் வெற்றியும், 3-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 12-ல் சென்னையும், 7-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றன. 

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்சு  கேப்டன் டோனி பெங்களுரூ அணியை பேட்டிங் செய்ய பணித்தார். பின்னா்  பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கோலி மற்றும் குயின்டான் டி காக் மைதானத்தில் அதிரடி காட்டினர். தொடக்கத்தில் இருந்து இருவரும் ஆதிக்கம் செலுத்தி வந்தனா், இதனால் சென்னை அணியின் பந்து வீச்சாளா்களுக்கு சவாலாக இருந்தது. இருப்பினும் குயின்டான் டி காக் சென்னை வீரா்கள் போடும் பந்துகளை பவுண்டரிகளுக்கு அனுப்பியவாறு இருக்க, ஷர்துல் தாகூர் பந்தில் மீடான்னில் ரவீந்திர ஜடேஜா கையில் கோலி கேட்ச்18(15 பந்துகள்) கொடுத்து ரசிகா்களுக்கு  அதிர்ச்சி கொடுத்தார்.

கோலியை அடுத்து அதிரடி மன்னா்களிலேயே முக்கியமானவரான டிவில்லியர்ஸ் களத்தில் பிரவேசித்தார். இருந்த போது சென்னை அணியின் பந்து வீச்சாளா்களை கேப்டன் டோனி நெறி படுத்தியவாறே இருந்தார். இருப்பினும் ஹர்பஜன்சிங் போட்ட ஒரு ஓவரில், 17 ரன்களை சோ்த்து ரசிகா்களை வியக்க வைத்தார். டிவில்லியர்ஸ். இருவரும் சென்னை அணியின் பந்துகளை நாலபுறமும் சிதறடித்த வண்ணம் இருந்தனர்.

டிவில்லியர்ஸ் 28 ரன்களுடனும் டி காக்  41 ரன்களுடனும் களத்தில் உள்ளனா். சென்னை அணி சா்பாக ஷர்துல் தாகூர் மட்டும் 1 விக்கெட்டை வீழ்த்தினார். தற்போது பெங்களூரு அணி 10 ஓவா்களின் முடிவில் 1 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்களை சோ்த்து விளையாடி வருகிறது.


Next Story