கிரிக்கெட்

வெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு பாராட்டும் பிரபலங்கள் + "||" + Weightu! Weightu! Weightu! Enga THALA DHONI Weightu!-Celebrities

வெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு பாராட்டும் பிரபலங்கள்

வெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு பாராட்டும் பிரபலங்கள்
வெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு என நேற்றைய கிரிக்கெட் போட்டி குறித்து பிரபலங்கள் பாராட்டி உள்ளனர். #Dhoni #Thala #CSK #CSKvRCB
சென்னை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேற்று மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் அபாரமாக ஆடி, 30 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய சென்னை அணி, ராயுடு மற்றும் தோனியின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி பெற்றது. ராயுடு, 53 பந்துகளில் 82 ரன்களும் தோனி, 34 பந்துகளில் 70 ரன்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, புள்ளிப்பட்டியலில், டாப்பில் இருக்கிறது.

இந்த போட்டியில் தோனி விஸ்வரூபம் எடுத்து விளையாடியதால் சென்னை அணி வெற்றி பெற்றது. தோனியின் ஆட்டத்தை பார்த்தவர்களால் அவரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

தோனியின் அபார ஆட்டத்தை பார்த்த இயக்குனர் வெங்கட் பிரபு என்ன ஒரு வெற்றி, என்ன ஒரு மேட்ச், தல தோனி, ராயுடு என்ன ஒரு இன்னிங்ஸ் என்று நெகிழ்ந்து ட்வீட்டியுள்ளார்.அருமையான மேட்ச். தோனி, என் நண்பன் ராயுடுவின் ஆட்டம் அபாரம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் விஷ்ணு விஷால். தோனி செம என்று இயக்குனர் சுசீந்திரன் பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். யாருப்பா சொன்ன off side போட்டா தலைவன் தடுமாறுவான்னு. கடைசி சிக்சர் பார்த்தீரல்லோ. எல்லா சைடும் அவன் சைடு தான் என்கிறார் நீயா நானா புகழ் கோபிநாத். தோனியின் சூப்பர் ஆட்டத்தை பார்த்த நடிகை சஞ்சனா அவரை புகழ்ந்து தள்ளி ட்வீட்டியுள்ளார்.

வெயிட்டு வெயிட்டு வெயிட்டு எங்க தல தோனி வெயிட்டு என்று தோனியை புகழ்ந்து ட்வீட் போட்டுள்ளார் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி.
 


தொடர்புடைய செய்திகள்

1. டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது: கம்பீர் சொல்கிறார்
டோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மன்களுக்கு நெருக்கடி அதிகரிக்கிறது என்று கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார். #Dhoni
2. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெறப்போகிறாரா? ரவிசாஸ்திரி விளக்கம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். #MSDhoni #Dhoni
3. சர்வதேச கிரிக்கெட்டுக்கு முழுக்கா? தோனியின் செயலால் பரபரக்கும் ரசிகர்கள்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தோனி திட்டமிட்டுள்ளாரா? என்ற சந்தேகத்தை அவரது ரசிகர்கள் எழுப்பியுள்ளனர். #MSDhoni
4. தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 37வது பிறந்தநாளை முன்னிட்டு, வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayDhoni #MSDhoni