கிரிக்கெட்

ஐ.பி.எல்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு + "||" + Kings XI Punjab have won the toss and have opted to field

ஐ.பி.எல்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு

ஐ.பி.எல்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு
ஐ.பி.எல் கிாிகெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சு தோ்வு செய்துள்ளது. #IPL2018
ஐதராபாத்,

11 வது ஐ.பி.எல் கிாிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைப்பெறுகிறது. இந்த இரவு ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. 

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே (பெங்களூருவுக்கு எதிராக) தோல்வி கண்டுள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பஞ்சாப் அணி வலுவாக இருப்பதால் தான் கம்பீரமாக பயணிக்கிறது. முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 118 ரன்கள் மட்டுமே எடுத்த போதும் அந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு மும்பையை முடக்கியது. 

ஐதராபாத் அணி இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 4–ல் வெற்றியும், 2–ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் பஞ்சாப்புக்கு எதிராக 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும். அந்த தோல்விக்கு சொந்த ஊரில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உள்ளது ஐதராபாத் அணி. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தோ்வு செய்துள்ளது