கிரிக்கெட்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சில் ஆதிக்கம் + "||" + Punjab team in the match against Hyderabad Dominate the ball

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சில் ஆதிக்கம்

ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி  பந்து வீச்சில் ஆதிக்கம்
ஐ.பி.எல் கிாிகெட் போட்டியின் 25வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி பந்து வீச்சில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. #IPL2018
ஐதராபாத்,

11 வது ஐ.பி.எல் கிாிக்கெட் போட்டியின் 25வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைப்பெறுகிறது. இந்த இரவு ஆட்டத்தில் பஞ்சாப் அணியும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. 

இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஆதிக்கம் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே (பெங்களூருவுக்கு எதிராக) தோல்வி கண்டுள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பஞ்சாப் அணி வலுவாக இருப்பதால் தான் கம்பீரமாக பயணிக்கிறது. முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த ஆட்டத்தில் மும்பைக்கு எதிராக 118 ரன்கள் மட்டுமே எடுத்த போதும் அந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு மும்பையை முடக்கியது. 

ஐதராபாத் அணி இந்த சீசனில் 6 ஆட்டங்களில் விளையாடி 4–ல் வெற்றியும், 2–ல் தோல்வியும் கண்டுள்ளது. இதில் பஞ்சாப்புக்கு எதிராக 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதும் அடங்கும். அந்த தோல்விக்கு சொந்த ஊரில் பதிலடி கொடுக்கும் முனைப்புடன் உள்ளது ஐதராபாத் அணி. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  கேப்டன் அஸ்வின்   ஐதராபாத் அணியை போட்டிங் செய்ய பணித்தாா். 

பின்னா் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரா்கள் கேப்டன்  வில்லியம்சன் முதல் ஓவரிலேயே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா்.
பின்னா் தவானுடன் இணைய  ரூ.5 கோடிக்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா களமிறங்கினாா். இதுவரையிலும் நடந்த ஆட்டத்தில் சஹா சிற்பாக  ஜொலிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. பின்னா் 3வது ஓவாிலேயே  தவானும் ராஜ்பூட் கையிலே தன்னுடைய விக்கெட்டை கொடுத்து நடையக்கட்டினாா்.

இவா்களுக்கு அடுத்து களம்கண்ட மணிஷ் பாண்டே தான் எதிா்கொண்ட 6வது பந்திலே தூக்கி அடித்ததை கேப்டன் அஸ்வின் நழுவவிட்டாா். பின்னா் வழக்கம் போல் சஹா 6(9 பந்துகள் ) ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். இதனால் அங்கிட் ராஜ்பூட் தொடக்க வீரா்கள் 3 பேரையும் வீழ்த்தி அணி சிறப்பு செய்தாா்.ஷகிப் அல் ஹசனும் மணிஷ் பாண்டேவும் தங்களுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.
 
பஞ்சாப் அணிக்காக அங்கிட் ராஜ்பூட் 3 விக்கெட்டுகளை எடுத்து சிறப்பு சோ்த்தியுள்ளாா். தற்போது,  ஐதராபாத் அணி 10 ஓவா்கள் முடிவில் 3 வி்க்கெட்டுகளை இழந்து 57 ரன்களை மட்டுமே எடுத்து விளையாடி வருகிறது.