கிரிக்கெட்

ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி + "||" + Sunrisers Hyderabad won by 13 runs

ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி

ஐபிஎல்: ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோல்வி
ஐபிஎல் போட்டியின் 25-வது லீக் ஆட்டத்தில் 13 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது. #IPL
ஐதராபாத்,

11 வது ஐ.பி.எல் கிாிக்கெட் போட்டியின் 25-வது லீக் ஆட்டம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி  கேப்டன் அஸ்வின், ஐதராபாத் அணியை பேட்டிங் செய்ய பணித்தாா். 

இதன்படி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் வில்லியம்சன் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே வில்லியம்சன் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா். பின்னா் தவானுடன் இணைய  விக்கெட் கீப்பர் விருத்திமான் சகா களமிறங்கினாா். இருவரும் பஞ்சாப் அணியினரின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணற ஆட்டத்தின் 3வது ஓவாிலேயே தவானும் ராஜ்பூட் கையில் தன்னுடைய விக்கெட்டை கொடுத்து நடையை கட்டினாா்.

இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள், பஞ்சாப் அணியினரின் அற்புதமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக  பஞ்சாப் அணியில் வேகப்பந்து வீச்சாளா் அங்கிட் ராஜ்பூட் தான் வீசிய 4 ஓவர்களில் 14 ரன்களே விட்டு கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐதராபாத் அணியின் ரன் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார். இதனால் ஐதராபாத் அணியின் ரன்வேகம் குறைந்ததால், அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக மணிஷ் பாண்டே 54 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இருவரும் ஐதராபாத் அணியினரின் பந்து வீச்சை சிறப்பான முறையில் எதிர்கொண்டனர். விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை கடந்து சிறப்பான தொடக்கத்தை தந்த, இந்த ஜோடி ரஷித் கானின் சுழற்பந்து வீச்சில் பிரிந்தது. 7.5-வது ஓவரில் ரஷித் கான் வீசிய சுழற்பந்தில் லோகேஷ் ராகுல் (32 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து கெய்ல்லும் (23 ரன்கள்)  சிறிது நேரத்தில் பெவிலியன் திரும்ப மயங்க் அகர்வாலுடன், கருண் நாயர் கை கோர்த்தார்.

இந்நிலையில் பொறுமையான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த பஞ்சாப் அணியினர் ஒரு கட்டத்தில் ஐதராபாத் அணியினரின் சவாலான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை பறி கொடுத்து வெளியேறினர். மயங்க் அகர்வால், கருண் நாயர், ஆரோன் பிஞ்ச், மனோஜ் திவாரி என அனைவரும் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் மள மளவென சரிந்தன. இதனால் பஞ்சாப் அணி 16 ஓவர்களில் 97 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதற்கு பின் களமிறங்கியவர்களும் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பியதால் 19.2 ஓவரில் பஞ்சாப் அணி 119 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், பஷில் தம்பீ, சகிப் அல் ஹசன், சந்தீப் சர்மா ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதனிடையே நாளை நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தின் 26-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி, தனது சொந்த மண்ணில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.