கிரிக்கெட்

பந்து வீச்சில் காலதாமதம்: பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலிக்கு அபராதம் + "||" + Delay in bowling: Bangalore team captain Fine for viadkololi

பந்து வீச்சில் காலதாமதம்: பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலிக்கு அபராதம்

பந்து வீச்சில் காலதாமதம்: பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலிக்கு அபராதம்
24–வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

பெங்களூரு, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த 24–வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது. கடைசி ஓவர் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி பந்து வீச்சில் நேரத்தை விரயம் செய்து காலதாமதப்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்திய ஐ.பி.எல். போட்டி அமைப்பு குழு பெங்களூரு அணி கேப்டன் விராட்கோலிக்கு ரூ.12 லட்சத்தை அபராதமாக விதித்தது. இந்த சீசனில் பந்து வீச்சு காலதாமதத்துக்காக ஒரு அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறையாகும்.