கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம் + "||" + In the IPL cricket Today's game

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டம்
11–வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டும் (மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக) வெற்றி பெற்றது.

டெல்லி டேர்டெவில்ஸ்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: டெல்லி, நேரம்: இரவு 8 மணி

ஸ்ரேயாஸ் அய்யர் கேப்டன் தினேஷ் கார்த்திக்

ரிஷாப் பான்ட், மேக்ஸ்வெல், ஜாசன் ராய், டிரென்ட் பவுல்ட், பிளங்கெட் நட்சத்திர வீரர்கள் ஆந்த்ரே ரஸ்செல், கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா.

வெற்றி–7 இதுவரை நேருக்கு நேர் 20 வெற்றி–13

புதிய கேப்டன் தலைமையில் டெல்லி அணி எழுச்சி பெறுமா?

11–வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இதுவரை 6 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டும் (மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக) வெற்றி பெற்றது. மற்ற 5 ஆட்டங்களில் தோல்வி கண்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. மோசமான தோல்விக்கு பொறுப்பு ஏற்று டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அனுபவமிக்க கவுதம் கம்பீர் விலகினார். புதிய கேப்டனாக இளம் வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தலைமையில் டெல்லி அணி சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும்.

டெல்லி அணி ‘பிளே–ஆப்’ சுற்றுக்கான வாய்ப்பில் இருக்க வேண்டும் என்றால் தனது எஞ்சிய 8 லீக் ஆட்டங்களில் 7–ல் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. டெல்லி அணியை பொறுத்தமட்டில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு ஒருசேர சிறப்பாக அமையாமல் அடம்பிடித்து வருகிறது. மோசமான பார்ம் காரணமாக ரன் எடுக்காமல் திணறியதால் கேப்டன் பதவியில் இருந்து விலகிய கம்பீர் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பாரா? என்பது பலத்த கேள்விக்குறியாகவே இருக்கிறது.

‘சவாலை சந்திக்க விரும்புகிறவன். கேப்டன் பொறுப்பை பயன்படுத்தி அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்வேன்’ என்று சூளுரைத்துள்ள இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் டெல்லி அணி சரிவில் இருந்து மீண்டு தலை நிமிருமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 4–வது இடம் வகிக்கிறது. கொல்கத்தா அணியின் பேட்டிங் மெச்சும் வகையில் சிறப்பாக இருந்தாலும், அந்த அணியின் பந்து வீச்சு சிறிய தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. அதனை சரி செய்ய வேண்டிய நிலையில் அந்த அணி இருக்கிறது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான டெல்லி ஆடுகளத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சுனில் நரின், குல்தீப் யாதவ், பியுஷ் சாவ்லா ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இந்த சீசனில் கொல்கத்தாவில் நடந்த முந்தைய லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடம் வீழ்ந்து இருந்தது. அந்த தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.

(நேரடி ஒளிபரப்பு ஸ்டார்போர்ட்ஸ்)தொடர்புடைய செய்திகள்

1. வீராட் கோலி-மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
கிரிக்கெட் வீரர் வீராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2. பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணியை வீழ்த்தி இலங்கை ஆறுதல் வெற்றி
இந்தியா – இலங்கை பெண்கள் அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டுநாயகேவில் நேற்று நடந்தது.
3. 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் ஆட்டத்தில் இலங்கை–வங்காளதேசம் மோதல்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது.
4. இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி மீண்டும் வெற்றி
இலங்கைக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்ற
5. ‘இந்திய கிரிக்கெட் அணி முன்னேற்றம் காண வீரர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்’ விராட்கோலிக்கு, கங்குலி அறிவுரை
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய அணி 1–4 என்ற கணக்கில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கேப்டன் விராட்கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் மீது விமர்சனம் எழுந்துள்ளது.