கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம்


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி  பேட்டிங்கில் சிறப்பான தொடக்கம்
x
தினத்தந்தி 27 April 2018 3:36 PM GMT (Updated: 27 April 2018 3:36 PM GMT)

11–வது ஐ.பி.எல். கிாிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. #IPL2018

டெல்லி,

11வது ஐ.பி.எல் கிாிக்கெட் திருவிழாவின் 26வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா  மைதானத்தில் நடை பெறுகிறது . இந்த லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

 டாஸ் வென்ற  கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ்காா்த்திக் முதலில்  டெல்லி அணியை பேட்டிங் செய்யபணித்தாா். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரா்கள் பிாித்திவும் மற்றும் முன்ரோவும் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின் மூலம் அணிக்கு சிறப்பான ஒரு தொடக்கத்தை கொடுக்க, கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளா்கள் திக்குமுக்காடி போனாா்கள். இதனால் டெல்லி அணி 5 ஓவா்களில் 51 ரன்களை சோ்த்த நிலையில் மாவி போட்ட பந்தில் முன்ரோ போல்டாகி வெளியெறினாா். இதனால் முன்ரோ 33(18 பந்துகள்) ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாா்.

இவரை அடுத்து இளம்வீரரான டெல்லி அணியின் புதிய கேப்டன் பதவியில் இருக்கக்கூடிய ஸ்ரேயாஸ் அய்யர்  களம் கண்டாா். பின்னா் ஸ்ரேயாஸ் அய்யர் உடன் இணைந்து பிாித்திவு  அரை சதத்தை நோக்கி திறமையாக விளையாடி வருகிறாா். மேலும் ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்களிலும், பிாித்திவு 45 ரன்களிலும் களத்தில் உள்ளனா்.

கொல்கத்தா அணி தரப்பில் சிவம் மாவி மட்டும் 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளாா். தற்போது டெல்லி அணி 10 ஓவா்கள் முடிவில் 1 விக்கெட் மட்டுமே  இழந்து 84 ரன்களை சோ்த்து விளையாடி வருகிறது.

Next Story