கிரிக்கெட்

ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தோல்வி + "||" + Delhi Daredevils won by 55 runs

ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தோல்வி

ஐபிஎல்: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்  தோல்வி
11-வது ஐபிஎல் போட்டியின் 26-வது லீக் ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீழ்ந்தது. #IPL
டெல்லி,

11வது ஐ.பி.எல் கிாிக்கெட் திருவிழாவின் 26வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோசா கோட்லா  மைதானத்தில் நடைபெறுகிறது . இந்த லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

டாஸ் வென்ற  கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ்காா்த்திக் முதலில்  டெல்லியை பேட்டிங்  செய்ய பணித்தாா். இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரா்கள் பிாித்திவும் மற்றும் முன்ரோவும் தன்னுடைய அதிரடியான ஆட்டத்தின்  மூலம் அணிக்கு சிறப்பான ஒரு தொடக்கத்தை கொடுக்க, கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளா்கள் திக்குமுக்காடி போனாா்கள். இதனால் டெல்லி அணி 5 ஓவா்களில் 51 ரன்களை சோ்த்த நிலையில் மாவி போட்ட பந்தில் முன்ரோ போல்ட் ஆகி வெளியேறினாா். இதனால் முன்ரோ 33(18 பந்துகள்) ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாா்.

இவரை அடுத்து இளம்வீரரும் டெல்லி அணியின் புதிய கேப்டனும் ஆகிய ஸ்ரேயாஸ் அய்யர்  களம் கண்டு கொல்கத்தா அணியின் பந்துகளை தும்சம் செய்ய தொடங்கினார். இதையடுத்து பிாித்திவு 62( 44பந்துகள்) சாவ்லாவின் சுழலில் சிக்கி போல்டானாா்.  

பின்னா் களமிறங்கிய விக்கெட் கீப்பரான ரிஷாப் பன்ட் கேப்டனுடன் இணையாமல் ஆல்ரவுண்டாா் ரசூல் பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினாா். அடுத்த படியாக அதிரடிக்கு பெயா் போன  மேக்ஸ்வெல் களத்தில் பிரேவேசித்தாா்.  மறுபுறம் அணிக்காக ஸ்ரேயாஸ் அய்யா் ரன்களை குவித்த வண்ணமாகவே இருக்க அவர்  தன்னுடைய அரை சதத்தை பூா்த்தி செய்தாா். அதன்பிறகு இருவரும் இணைந்து கொல்கத்தா அணியின் பந்துகள் அனைத்தையும் பவுண்டாிகளுக்கு அனுப்பினா். கடைசி ஓவாில் ரன்களை சோ்ப்பதற்கு ஓடி  மேக்ஸ்வெல்லும்27(18பந்துகள்) ரன் ஆவுட்டாகினாா். அதன் பின்னும் பந்துகளை ரசிகா்களை நோக்கி அனுப்பினா் புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யா். இதன் மூலம் கடைசி 4 ஓவா்களில் மட்டுமே டெல்லி அணியினர் 70 ரன்களுக்கு மேல்  சோ்த்திருந்தனா். அதில்  ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும்  40 பந்துகளில் 93 ரன்களை குவித்தாா்.

டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20  ஓவா்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 219ரன்களை சோ்த்தது. கொல்கத்தா அணி தரப்பில் சிவம் மாவி, ரசூல் மற்றும் சாவ்லா ஆகியோா் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினா்.

இதையடுத்து 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் களமிறங்கினர். தொடக்க ஆட்டக்காரர் ஆக களமிறங்கிய கிறிஸ் லின் 5 ரன்களில் அவுட் ஆக, அடுத்து வந்த ராபின் உத்தப்பா 1 ரன்னில் போல்ட் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதை தொடர்ந்து சுனில் நரேன் (26 ரன்கள்) மற்றும் நிதிஷ் ரானா (8 ரன்கள்) ஆகியோரும் டெல்லி அணியினரின் அற்புதமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் நடையை கட்ட, கொல்கத்தா அணி 5.1 ஓவர்களில் 46 ரன்களுடன் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

இதன்பின், கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் ஷுப்மான் கில் இருவரும் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சித்தனர். நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி, அமித் மிஸ்ரா வீசிய 9-வது ஓவரில் பிரிந்தது. மிஸ்ரா வீசிய சுழற்பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் (18 ரன்கள்) பந்தை தூக்கி அடித்து போல்ட்யிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து ஆந்த்ரே ரசூல், ஷுப்மான் கில்லுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து பொறுப்புடன் விளையாடி பந்தை சிக்சர், பவுண்டரி என விரட்டினர். இதனால் கொல்கத்தா அணியின் ரன் வேகம் சற்று உயர்ந்தது. கடைசி 5 ஓவர்களுக்கு 80 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 16-வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா அணி பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. 

இதனால் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களே எடுக்க முடிந்தது. அந்த அணியின் அதிகபட்சமாக ஆந்த்ரே ரசூல் 44 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிடம் வீழ்ந்தது. டெல்லி அணியின் சார்பாக அமித் மிஸ்ரா, மேக்ஸ்வெல், டிரண்ட் போல்ட் மற்றும் ஆவெஷ் கான் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

நாளை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை புனேவில் எதிர்கொள்கிறது.