56 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்கிறது


56 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 27 April 2018 8:55 PM GMT (Updated: 27 April 2018 8:55 PM GMT)

ஒய்.எஸ்.சி.ஏ.கோப்பைக்கான 49–வது அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னை காந்திநகர் கிளப் மைதானத்தில் வருகிற 1–ந் தேதி தொடங்குகிறது.

சென்னை, 

ஒய்.எஸ்.சி.ஏ.கோப்பைக்கான 49–வது அகில இந்திய கிரிக்கெட் போட்டி சென்னை காந்திநகர் கிளப் மைதானத்தில் வருகிற 1–ந் தேதி தொடங்குகிறது. ஜூன் 24–ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஐ.ஓ.சி. (மும்பை), இந்திய கடற்படை (மும்பை), கேரளா கிரிக்கெட் சங்கம், விஜயா வங்கி (பெங்களூரு), லயோலா, ஏ.ஜி.அலுவலகம் உள்பட 56 அணிகள் கலந்து கொள்கின்றன. கால்இறுதி வரை நாக்–அவுட் முறையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் போட்டி நடைபெறும். கால்இறுதியில் இருந்து லீக் முறையில் தினசரி போட்டி நடைபெறும். லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். இறுதிப்போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.25 ஆயிரமும், 2–வது இடம் பெறும் அணிக்கு ரூ.15 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இது தவிர பல்வேறு சிறப்பு பரிசுகளும் அளிக்கப்படும். இந்த தகவலை ஓய்.எஸ்.சி.ஏ. செயலாளர் குருமூர்த்தி தெரிவித்தார்.


Next Story