கிரிக்கெட்

டோனியை பாராட்டிய பாகிஸ்தான் பெண் வர்ணனையாளரை கடுமையாக சாடிய பாக். ரசிகர்கள் + "||" + PSL anchor Zainab Abbas praises MS Dhoni , gets trolled by Pakistan fans !

டோனியை பாராட்டிய பாகிஸ்தான் பெண் வர்ணனையாளரை கடுமையாக சாடிய பாக். ரசிகர்கள்

டோனியை பாராட்டிய பாகிஸ்தான் பெண் வர்ணனையாளரை கடுமையாக சாடிய பாக். ரசிகர்கள்
டோனியை பாராட்டிய பாகிஸ்தான் பெண் வர்ணனையாளரை பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். #MSDhoni

உலகின் சிறந்த பினிஷர் என பெயர் பெற்ற டோனி, கடந்த சில மாதங்களாக சரியாக ஆடாததால், அவரது வயதை சுட்டிக்காட்டி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், தன் மீதான விமர்சனங்களுக்கு, நடந்துவரும் ஐபிஎல் தொடரில் தனது பேட்டிங்கால் பதிலடி கொடுத்து வருகிறார் டோனி. பஞ்சாப் அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிய டோனி,  விளிம்பில் வெற்றியை நழுவவிட்டார். ஆனால், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி அணியை வெற்றியடைய செய்தார். மீண்டும் ஒருமுறை தான் ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபித்தார்.

இந்நிலையில், டோனியின் பேட்டிங்கை பாராட்டி பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் வர்ணனையாளர் ஜய்னப் அப்பாஸ் டுவீட் போட்டிருந்தார். அதில், இந்த உலகிற்கு தான் இன்னும் ஒரு சிறந்த பினிஷர் என்பதை நிரூபிக்க டோனிக்கு கிடைத்த வாய்ப்பு இது. என்ன ஒரு ஹிட் என பதிவிட்டிருந்தார்.

இவரது இந்த பதிவிற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் கண்டனங்களையும் விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.