கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதில் வெற்றி + "||" + Mumbai Indians won by 8 wkts

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதில் வெற்றி

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி எளிதில் வெற்றி
ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. #IPL
புனே, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 27-வது லீக் ஆட்டம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் அணிகள் மீண்டும் மோதின.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தது. இதன்படி களமிறங்கிய சென்னை அணி தொடக்க வீரா்கள் அம்பதி ராயுடுயும், ஷேன் வாட்சனும்  தொடக்கத்தில் இருந்தே சிறிது தடுமாற்றத்துடன் விளையாடி வந்தனா். இந்நிலையில் ஷேன் வாட்சன் குருணால் பாண்டியா  போட்ட பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இவரை அடுத்து இடது கை ஆட்டகாரரான சுரேஷ் ரெய்னா களம் கண்டாா்.

சுரேஷ் ரெய்னாவுடன் இணைந்த அம்பதி ராயுடு விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தாா். இதனால் அணியின் ரன் சற்று வேகமாக அதிகாிக்க தொடங்கியது. பின்னா் மும்பை அணியின் பந்துகளை நாலாபுறமும சிதறடிக்க தொடங்கினாா் அம்பத்தி ராயுடு. வாட்சனை போல குருணால் பாண்டியாவின் சுழலில் அம்பத்தி ராயுடும் 46(35பந்துகள்)  சிக்கி ஆவுட்டாகினாா். இவரை அடுத்து உலகின் சிறந்த பினிஷர் என அழைக்கப்படும் கேப்டன் டோனி களத்தில் தோன்றி ரசிகர்களிடம் ஆரவாரத்தை ஏற்படுத்தினாா். பின்னா் டோனியும்26(21பந்துகள்) கடைசி தருவாயில் மெக்கிளேனகன் போட்ட பந்தில் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்ப அடுத்த வந்த அதிரடி ஆல் ரவுண்டா் பிராவோவும் அடுத்த பந்திலேயே நடையை கட்டினாா். 

இதனால் மைதானத்தில் அமைதியான ஒரு சூழ்நிலை நிலவியது. இருந்த போதும் மறுமுனையில் இருந்த சுரேஷ் ரெய்னா தன்னுடைய அதிரடி ஆட்டத்தை  காட்டிய வண்ணம் இருந்தாா். கடைசி ஓவாில் அடிக்க நினைத்து சாம் பில்லிங்ஸ் 3 ரன்களில் வெளியேறினார். பின்னா் கடைசியில் 20 ஓவா்கள் முடிவில் சுரேஷ் ரெய்னா 75(47பந்துகள்) ரன்களுடனும், ஜடேஜா ரன்கள் ஏதும் ஏடுக்காமல் களத்தில் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பந்து வீசிய குருணால் பாண்டியா மற்றும் மெக்கிளேனகன் ஆகியோா் தலா 2  விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னா் ஹர்திக் பாண்டியா தன்னுடைய பங்கிற்கு 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 169 ரன்கள் எடுத்தது.

பின்னர் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் எவின் லெவிஸ் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் சென்னை அணியினரின் பந்து வீச்சை மிக சுலபமாக எதிர்கொண்டு ரன்களை சேர்க்க தொடங்கினர். இந்த ஜோடியின் சிறப்பான தொடக்கத்தால் முதல் 6 ஓவர்களில் மும்பை அணி 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி 9.5-வது ஓவரில் ஹர்பஜன் சிங்கின் சுழலில் பிரிந்தது.

ஹர்பஜன் வீசிய சுழற்பந்தை எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ் (44 ரன்கள்) ரவீந்திர ஜடேஜாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா, எவின் லெவிஸுடன் கை கோர்த்தார். சென்னை அணியின் பந்து வீச்சை சிரமமின்றி எதிர்கொண்ட இவர்கள், மும்பை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இதனிடையே ஆட்டத்தின் 16.1-வது ஓவரில் சிறப்பாக ஆடி வந்த எவின் லெவிஸ் 47 ரன்களில் பிராவோ பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்க, இருவரும் இணைந்து அதிரடியாக ஆட, மும்பை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் அணி, இன்றைய வெற்றியின் மூலம் பழி தீர்த்து கொண்டது. 

சென்னை அணியின் தரப்பில் ஹர்பஜன் சிங் மற்றும் பிராவோ ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்நிலையில் நாளை ஜெய்பூரில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 28-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதி கொள்கின்றன. மற்றொரு லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...