கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள் + "||" + In IPL cricket Today's matches

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டங்கள்
ராஜஸ்தான் இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 5–வது இடத்தில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ்

இடம்: ஜெய்ப்பூர், நேரம்: மாலை 4 மணி

கேப்டன் ரஹானே/கனே வில்லியம்சன்

நட்சத்திர வீரர்கள் சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர், தவால் குல்கர்னி, ஜோப்ரா ஆர்ச்சர்/ ஷிகர் தவான், ரஷித்கான், மனிஷ் பாண்டே, ‌ஷகிப் அல்–ஹசன், யூசுப் பதான்

வெற்றி–4 இதுவரை நேருக்கு நேர் 8 வெற்றி–4

ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளிக்குமா ராஜஸ்தான்

ராஜஸ்தான் இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 5–வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி ‘ஹாட்ரிக்’ தோல்வியை சந்திக்க இருந்த நிலையில் ஆல்–ரவுண்டர் கிருஷ்ணப்பா கவுதமின் அதிரடியால் முந்தைய லீக் ஆட்டத்தில் மும்பை அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் கண்ட வெற்றிக்கு பிறகு ஒரு வாரம் ஓய்வு எடுத்து விட்டு ராஜஸ்தான் அணி புத்துணர்ச்சியுடன் இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

ஐதராபாத் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2–வது இடத்தில் இருக்கிறது. முதல் 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி கண்ட ஐதராபாத் அணி அடுத்த 2 ஆண்டுகளில் தோல்வி அடைந்தாலும், சரிவில் இருந்து மீண்டு தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் முறையே மும்பை, பஞ்சாப் அணிகளை வீழ்த்தியது. புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற ஐதராபாத் அணி முனைப்பு காட்டும். முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க ராஜஸ்தான் அணி முயற்சிக்கும். இரு அணியிலும் சமபலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

***

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

இடம்: பெங்களூரு, நேரம்: இரவு 8 மணி

கேப்டன் விராட்கோலி/தினேஷ் கார்த்திக்

நட்சத்திர வீரர்கள் டிவில்லியர்ஸ், குயின்டான் டி காக், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், மன்தீப்சிங்/கிறிஸ் லின், சுனில் நரின், ராபின் உத்தப்பா, நிதிஷ் ராணா, ஆந்த்ரே ரஸ்செல்

வெற்றி–12 இதுவரை நேருக்கு நேர் 21 வெற்றி–9

பெங்களூரு அணியை மீண்டும் வீழ்த்துமா கொல்கத்தா

பெங்களூரு அணி இந்த சீசனில் தடுமாறி தான் வருகிறது. அந்த அணி 6 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 6–வது இடத்தில் இருக்கிறது. பெங்களூரு அணி தனது முந்தைய லீக் ஆட்டத்தில் 205 ரன்கள் குவித்தும் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வி கண்டது. இந்த தோல்வி நிச்சயம் பெங்களூரு அணிக்கு பெருத்த தலைவலியை கொடுத்து இருக்கும். அந்த மோசமான தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி உள்ளது.

கொல்கத்தா அணி 7 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 4–வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் பஞ்சாப், டெல்லி அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது. டெல்லி அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 219 ரன்களை விட்டுக்கொடுத்தது. அந்த அளவுக்கு கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பலவீனமாக இருந்தது. மிட்செல் ஜான்சன், ஷிவம் மாவி ஆகியோரின் பந்து வீச்சு மிகவும் மந்தமாக இருந்தது.

கொல்கத்தா–பெங்களூரு அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டத்தில் சொந்த மண்ணில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தி இருந்தது. அதற்கு பதிலடி கொடுக்க பெங்களூரு அணி தீவிரம் காட்டும். பெங்களூரு மைதானம் சிறியது என்பதாலும், இரு அணியிலும் அதிரடி வீரர்கள் இடம் பெற்று இருப்பதாலும் இந்த ஆட்டத்தில் ரன் குவிப்புக்கு குறைவு இருக்காது.

(நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்)தொடர்புடைய செய்திகள்

1. ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழகம்–ஐதராபாத் அணிகள் மோதல் நெல்லையில் இன்று தொடங்குகிறது
இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் 37 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
2. கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சென்னையில் இன்று மோதல்
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று நடக்கிறது.
3. பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை 46 ரன்னில் சுருட்டி வெஸ்ட்இண்டீஸ் அணி வெற்றி
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்காளதேச அணியை 46 ரன்னில் சுருட்டிய வெஸ்ட்இண்டீஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்
4. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணி வெற்றி
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
5. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: உமேஷ் யாதவ், பும்ரா, குல்தீப் யாதவுக்கு ஓய்வு
இந்தியா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று 2–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.