கிரிக்கெட்

ஐ.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தோ்வு + "||" + Hyderabad team won the toss and select to batting

ஐ.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தோ்வு

ஐ.பி.எல் கிரிக்கெட்:  ராஜஸ்தான் ராயல்ஸ்  எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற  ஐதராபாத் அணி பேட்டிங்  தோ்வு
11வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தோ்வு செய்துள்ளது. #IPL2018
ஜெய்ப்பூர்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்ஸ்டேடியத்தில் 28வது லீக் ஆட்டம் நடைப்பெறுகிறது. இந்த பகல்-இரவு ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

கடந்த ஆட்டங்களில் ராஜஸ்தான் அணி இதுவரை 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 5–வது இடத்தில் உள்ளது. மேலும்,  ஐதராபாத் அணி 7 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 2–வது இடத்தில் இருக்கிறது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. அந்த தோல்விக்கு பழிதீர்க்க ராஜஸ்தான் அணி முயற்சிக்கும். இரு அணியிலும் சமபலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என கருதப்படுகிறது 

இந்நிலையில்,  ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இந்தப்போட்டியில் , டாஸ் வென்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஐதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக வீரர் அபினவ் முகுந்த் சதம்
ஐதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில், தமிழக வீரர் அபினவ் முகுந்த் சதம் அடித்தார்.