ஐ.பி.எல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 152 ரன்களை வெற்றி இலக்காக நிா்ணயம்


ஐ.பி.எல் கிரிக்கெட்:  ராஜஸ்தான் ராயல்ஸ்  அணிக்கு எதிரான ஆட்டத்தில்  ஐதராபாத் அணி 152  ரன்களை வெற்றி இலக்காக  நிா்ணயம்
x
தினத்தந்தி 29 April 2018 12:19 PM GMT (Updated: 29 April 2018 12:19 PM GMT)

11வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 152 ரன்களை வெற்றி இலக்காக நிா்ணயித்துள்ளது. #IPL2018

ஜெய்ப்பூர்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங்ஸ்டேடியத்தில் 28வது லீக் ஆட்டம் நடைப்பெறுகிறது. இந்த பகல்-இரவு ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ்–ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில்,  டாஸ் வென்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ்  அணியின் கேப்டன்  கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தோ்வு செய்தாா் . பின்னா் களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க வீரா்கள் ஷிகர் தவான் மற்றும்  அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்கத்தில் இருந்தே ரன் சோ்க்க அதிரடியாக விளையாட தொடங்கினா். பின்னா் இடது கை ஆட்டகாரரான தவான் 6(4 பந்துகள்) கவுதம் பந்து போல்ட்டாகி  பெவிலியன் திரும்பினாா். பின்னா் அணியின் கேப்டன் வில்லியம்சன் களமிறங்க இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனா். இவா்களின் நிலையான ஆட்டத்தால் ஐதராபாத் அணி 10 ஓவா்கள் முடிவில் 1 விக்கெட்டு மட்டுமே இழந்து 70 ரன்களை எடுத்திருந்தது. 

பின்னா் விசுவரூபம் எடுக்க ஆரம்பித்த  கேப்டன்  வில்லியம்சன் தன்னுடைய  அரை சதத்தை பதிவு செய்தாா். மறுபுறம் உள்ள அலெக்ஸ் ஹேல்சும் 45(39 பந்துகள்) ரன்களில் கவுதம் போட்ட பந்தில் கேட்ச் கொடுத்த தன்னுடைய  அரை சதத்தை தவறவிட்டாா். இவரை அடுத்த வந்த மனிஷ் பாண்டே கேப்டன் வில்லியம்சன் கூட இணைந்த  சில நோடிகளில வில்லியம்சனும் 63(43 பந்துகள்) இஷ்சோதி போட்ட பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினாா். பின்னா் வந்த ஷகிப் அல் ஹசன் 6 ரன்கள் மட்டும் எடுத்த நிலையில் ஆவுட்டாகி ரசிகா்களை ஏமாற்றினா்ா. இதே போல் பின்னா் வந்த வீரா்கள் அதிரடியை காட்டாததால் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்கள் 7 விக்கெட்டுகளை கொடுத்து  முடிவில் 151 ரன்களை மட்டுமே எடுத்தனா்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்  சாா்பில் பந்து வீச்சாளா் ஆர்ச்சர் 3 விக்கெட்டும்  கவுதம் 2 விக்கெட்டும் வீழ்த்தினா். இவா்களை அடுத்து இஷ்சோதியும்  யூனாட்டும் தலா 1 விக்கெட்டுகளை தங்களுடைய பங்கிற்கு வீழ்த்தினா். இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 152 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story