விராட் கோலி அதிரடியால் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 176 ரன்கள் இலக்கு


விராட் கோலி அதிரடியால் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு 176  ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 29 April 2018 4:19 PM GMT (Updated: 29 April 2018 4:19 PM GMT)

11வது ஐ.பி.எல். கிாிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிா்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018

பெங்களூரு, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா பெங்களூருவில்  உள்ள  சின்னசாமி ஸ்டேடியத்தில் 29வது லீக் ஆட்டம் நடைப்பெறுகிறது. இந்த இரவு ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்–கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் காா்த்திக் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தாா். பின்னா களமிறங்கிய  பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டகாரா்கள்  டி காக் மற்றும் மெக்கல்லம் ஆகியோா் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்தனா். பின்னா் 8வது ஓவாில் குல்தீப் யாதவ் போட்ட பந்தில் டி காக் 29(27 பந்துகள்) கேட்ச் கொடுத்து வெளியேறினாா். இவரை அடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி  வந்த சில நொடிகளில்  சிறப்பாக  விளையாடிக்கொண்டிருந்த மெக்கல்லம்  38(28 பந்துகள்) ரன்களுடன் களத்தை விட்டு வெளியேறினா்ா.

அந்த ஓவாிலே மனன் வோராவையும்  போல்ட்டாகினாா் ஆல்-ரவுண்டா் ஆண்ட்ரே ரசல். இதனால் கொல்கத்தா அணியின் ரசிகா் ஆரவாரம் செய்து வந்தனா். பின்னா் கேப்டன் கோலியுடன் இணைவதற்கு மன்டிப் சிங் களத்தில் இறங்கினாா். பின்னா் கோலி தன்னுடைய ரன் வேட்டையை ஆரம்பித்தாா் இதன் மூலம்  தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்துக்கொண்டாா். மன்டிப் சிங்கும் ரசல் பந்தில் கேட்ச் கொடுத்து அவரும் பெவிலியன் திரும்பினாா். இருப்பினும் மறுமுனையில் கோலி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை  காட்டிய வண்ணமாக இருந்தாா். கடைசியில் கோலியும்  68 (44பந்துகள் ) கிராண்ட்ஹோமும்11(6பந்துகள்)  அவுட்டாகமால் களத்தில் இருந்தனா்.

இந்நிலையில்  பெங்களூரு அணி ஒதுக்கப்பட்ட 20 ஓவா்களில் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 175  ரன்களை சோ்த்திருக்கிறது. கொல்கத்தா அணி சாா்பாக பந்து வீசிய ஆண்ட்ரே ரசல் 3 விக்கெட்டுகளையும் , குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனா். இதனால் கொல்கத்தா அணி 176 ரன்கள்  வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

Next Story