கிரிக்கெட்

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி + "||" + Kolkata Knight Riders won by 6 wkts

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி
ஐபிஎல் போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. #IPL
பெங்களூரு, 

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 29-வது லீக் ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா, பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய பணித்தது.

இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரா்கள்  டி காக் மற்றும் மெக்கல்லம் ஆகியோா் ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடி வந்தனா். பின்னா் 8வது ஓவாில் குல்தீப் யாதவ் போட்ட பந்தில் டி காக் 29(27 பந்துகள்) கேட்ச் கொடுத்து வெளியேறினாா். இவரை அடுத்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி வந்த சில நொடிகளில், சிறப்பாக  விளையாடிக்கொண்டிருந்த மெக்கல்லம் 38(28 பந்துகள்) ரன்களுடன் களத்தை விட்டு வெளியேறினா்ா.

அந்த ஓவாிலேயே மனன் வோராவையும்  அவுட்டாக்கினாா் ஆல்-ரவுண்டா் ஆந்த்ரே ரசூல். இதனால் கொல்கத்தா அணியின் ரசிகா்கள் ஆரவாரம் செய்து வந்தனா். பின்னா் கேப்டன் கோலியுடன் இணைவதற்கு மன்திப் சிங் களத்தில் இறங்கினாா். பின்னா் கோலி தன்னுடைய ரன் வேட்டையை ஆரம்பித்தாா் இதன் மூலம்  தன்னுடைய அரை சதத்தை பதிவு செய்துக்கொண்டாா். மன்திப் சிங்கும் ரசூல் பந்தில் கேட்ச் கொடுத்து அவரும் பெவிலியன் திரும்பினாா். இருப்பினும் மறுமுனையில் கோலி தன்னுடைய அதிரடி ஆட்டத்தை  காட்டிய வண்ணமாக இருந்தாா். கடைசியில் கோலியும்  68 (44பந்துகள் ) கிராண்ட்ஹோமும்11(6பந்துகள்) அவுட்டாகாமல் களத்தில் இருந்தனா்.

இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவா்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 175  ரன்களை சோ்த்தது. கொல்கத்தா அணி சாா்பாக பந்து வீசிய ஆந்த்ரே ரசூல் 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுனில் நரேன் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்திலிருந்தே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இந்த ஜோடி பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இதன் விளைவாக 6.3-வது ஓவரில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 55 ரன்களை எடுத்து வலுவான நிலையில் இருந்த போது திடீரென மழை பெய்ய தொடங்கியதால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டது.

மழை ஓய்ந்ததும் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், சுனில் நரேன் (27 ரன்கள்) முருகன் அஸ்வின் சுழற்பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, கிறிஸ் லின்னுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து பெங்களூரு அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து அணியின் ரன் வேகத்துக்கு உதவினர். இருப்பினும் மீண்டும் முருகன் அஸ்வின் சுழலில் சிக்கி உத்தப்பா 36 ரன்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. 

தொடர்ந்து நிதிஷ் ராணா, கிறிஸ் லின்னுடன் இணைந்தார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் முதுகு வலி காரணமாக நிதிஷ் ராணா (15 ரன்கள்) வெளியேற, அதிரடி வீரர் ஆந்த்ரே ரசூல் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே டி காக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் தினேஷ் கார்த்திக் தன் பங்குக்கு 23 ரன்கள் எடுத்து வெளியேற, கொல்கத்தா அணி 19.1-வது ஓவர்களில் வெற்றி இலக்கான 176 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின் 62 ரன்கள் எடுத்து கடைசி வரையிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இதன்மூலம் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது. பெங்களூரு அணி சார்பாக முருகன் அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை புனேவில் எதிர்கொள்கிறது.