கிரிக்கெட்

இங்கிலாந்து தொடருக்குத் தேர்வாகும் சிஎஸ்கே வீரர்?- தேர்வுக்குழுத் தலைவர் சூசகம் + "||" + England will be selected for the series CSK player? Selector chairperson

இங்கிலாந்து தொடருக்குத் தேர்வாகும் சிஎஸ்கே வீரர்?- தேர்வுக்குழுத் தலைவர் சூசகம்

இங்கிலாந்து தொடருக்குத் தேர்வாகும் சிஎஸ்கே வீரர்?- தேர்வுக்குழுத் தலைவர் சூசகம்
இந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு, மொத்தம் 329 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாஹ், இந்த வருட ஐபிஎல் போட்டியில் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார். ராயுடுவின் பேட்டிங் அவரை மிகவும் கவரவே, இந்திய அணி இந்தத் திறமையைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற தனது கருத்தை வர்ணனையில் வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் விராட் கோலியிடம் கேட்டபோது கிடைத்த பதில்

ராயுடு இளம் வீரர் அல்லர். அவர் 15 வருடங்களாக முக்கியமான போட்டிகளில் பங்கேற்று வருகிறார். திறமையான வீரர். இந்தியாவுக்காகவும் சிறப்பாக விளையாடியுள்ளார். யாருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்று ஒருவராலும் கூறமுடியாது. அவருக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார் கோலி.

32 வயது ராயுடு, இந்தியாவுக்காக 34 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார். 2013-ம் வருடம் ஒருநாள் போட்டியில் அறிமுகமான ராயுடு, 2016 ஜூனுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை.

அம்பத்தி ராயுடு, இந்தியாவுக்காக விளையாடிய கடைசி 5 ஒருநாள் ஆட்டங்களில் எடுத்த ரன்கள்

44, 124*, 41, 62*, 41* (ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு எதிராக எடுத்தவை.)

ஐபிஎல் ஏலத்தில் ரூ. 2.20 கோடிக்கு அம்பத்தி  ராயுடுவைத் தேர்வு செய்தது சூப்பர் கிங்ஸ் அணி. இந்த வருட ஐபிஎல் போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பாக விளையாடி வரும் ராயுடுவை இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யவேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து இந்திய அணித் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத்திடம் கேட்டபோது அவர் அளித்த பதில்

அவர் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் வீரர்களைத் தேர்வு செய்வதில் எங்களுக்கு அவர் கூடுதல் வாய்ப்புகளை வழங்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஜூன் மாதம் முதல் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. 3 டி20 ஆட்டங்களிலும் 3 ஒருநாள் ஆட்டங்களிலும் 5 டெஸ்டுகளிலும் பங்கேற்கவுள்ளது. ஐபிஎல்-லில் அதிரடியாக விளையாடி வரும் ராயுடு டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ராயுடு தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது


தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் போட்டி: அதிக ரன்கள் எடுத்து இந்திய வீரர்கள் பட்டியலில் மித்தாலி ராஜ் முதலிடம்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோஹித் சர்மா, விராட் கோலியை தாண்டி மித்தாலி ராஜ் முதலிடம் பிடித்துள்ளார்.
2. வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய கோலி : இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தி
இந்திய பேட்ஸ்மேன்களை பிடிக்காதவர்கள் இந்தியாவில் இருக்க வேண்டாம். வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய விராட் கோலியின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியில் உள்ளது.
3. ஒரே ஓவரில் 43 ரன்கள் எடுத்து சாதனை படைத்த நியூசிலாந்து வீரர்கள்
ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசி நியூசிலாந்து வீரர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
4. அசாருதீனுக்கு கவுரவம் பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம்
கொல்கத்தா இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் அசாருதீனுக்கு கவுரவம் அளிதததர்கு பிசிசிஐ மீது காம்பீர் விமர்சனம் வைத்துள்ளார்.
5. 30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி
30-வது பிறந்தநாளை கொண்டாடும் வீராட் கோலி க்கு விளையாட்டு வீரர்கள் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். #HappyBirthdayVirat