கிரிக்கெட்

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு + "||" + Delhi Daredevils opt to bowl

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல்: சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு
ஐபிஎல் போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. #IPL
புனே,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சாம்பியனான சென்னை அணி 7 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, 2 தோல்வி (பஞ்சாப், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில்) கண்டுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் வீழ்ந்தது. அந்த மோசமான தோல்வியில் இருந்து மீண்டுவர வேண்டிய நெருக்கடி சென்னை அணிக்கு உள்ளது. 

அதே போல் டெல்லி அணி 7 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி (மும்பை, கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில்), 5 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பேற்ற முதல் ஆட்டத்திலேயே டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது. அந்த நம்பிக்கையுடன் டெல்லி அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது.

இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ய இருக்கிறது.