கிரிக்கெட்

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்கள் குவிப்பு + "||" + CSK vs DD: Watson, Dhoni power Chennai Super Kings to 211/4

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்கள் குவிப்பு

ஐபிஎல்: டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 211 ரன்கள் குவிப்பு
ஐபிஎல் போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி வெற்றி பெற 212 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்காக வைத்தது. #IPL
புனே,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகின்ற 30-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக 

முதலில் பேட்டிங் செய்ய தொடக்க ஆட்டக்காரர்களான டூ பிளசிஸ் மற்றும் ஷேன் வாட்சன் ஆகியோர் களமிறங்கினர். முதல் 2 ஓவர்களில் நிதானமான 
ஆட்டத்தை வெளிபடுத்திய இந்த ஜோடி பிறகு விஸ்வரூபம் எடுத்தது. இதனால் சென்னை அணியின் ரன்வேகம் மள மளவென உயர்ந்தது. 5.2 ஓவர்களில் 50 
ரன்களை கடந்த இந்த ஜோடி, தொடர்ந்து டெல்லி அணியினரின் பந்து வீச்சை துவம்சம் செய்து வந்தது. குறிப்பாக ஷேன் வாட்சன் பந்தை அவ்வபோது எல்லைக் கோட்டை தாண்டி பறக்கவிட்டு ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தார். 

இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் திணறிய டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து ரன்களை வழங்கிய வண்ணமிருந்தனர். இந்நிலையில் முதல் 10 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 96 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஆட்டத்தின் 10.5-வது ஓவரில் டூ பிளசிஸ் (33 ரன்கள்) விஜய் சங்கர் பந்து வீச்சில் தூக்கி அடிக்க நினைத்து கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரெய்னா வெறும் ஒரு ரன் எடுத்து மேக்ஸ்வெல் பந்து வீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய அம்பதி ராயுடு, ஷேன் வாட்சனுடன் கை கோர்த்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஷேன் வாட்சன் (78 ரன்கள், 4 பவுண்டரி, 7 சிக்ஸர்கள்) அமித் மிஸ்ரா பந்து வீச்சில் அவுட் ஆகினார். 

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ராயுடுவுடன் இணைந்தார். 15 ஓவர்களில் 137 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த 
சென்னை அணி, பிறகு ரன் வேட்டையில் ஈடுபட தொடங்கியது. குறிப்பாக டிரண்ட் போல்ட் வீசிய 16-வது ஓவரை எதிர்கொண்ட தோனி தொடர்ந்து 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஒரு முனையில் அம்பதி ராயுடு (41 ரன்கள்) அதிரடி காட்ட, மறுமுனையில் டெல்லி அணியினரின் பந்து வீச்சை வெளுத்து வாங்கிய தோனி 22 பந்துகளில் 51 ரன்கள் (5 சிக்ஸர்கள், 2 பவுண்டரி) குவித்து மாஸ் காட்டினார். இறுதியில் சென்னை அணி 4 விக்கெட்டுகள்  இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது. டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் சார்பாக விஜய் சங்கர், மேக்ஸ்வெல் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 

இதையடுத்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடி வருகிறது.