கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா? டெல்லி அணியுடன் இன்று மோதல் + "||" + IPL Cricket: Reuters from Rajasthan Royals Confrontation with Delhi team

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா? டெல்லி அணியுடன் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் சரிவில் இருந்து மீளுமா? டெல்லி அணியுடன் இன்று மோதல்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
புதுடெல்லி,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.


ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி அணி 8 ஆட்டத்தில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கி இருக்கிறது. கொல்கத்தா அணியை வீழ்த்திய டெல்லி அணி முந்தைய லீக் ஆட்டத்தில் சென்னை அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்தில் 212 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி நெருக்கமாக வந்து தோல்வியை சந்தித்தது.

டெல்லி அணியின் பேட்டிங்கில் ஸ்ரேயாஸ் அய்யர் (257 ரன்கள்) ரிஷாப் பான்ட் (306 ரன்கள்) விஜய் சங்கர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். மேக்ஸ்வெல், காலின் முன்ரோ பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்கள். பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (11 விக்கெட்டுகள்) சிறந்து விளங்கி வருகிறார். ராகுல் திவேதியா, பிளங்கெட், அமித் மிஸ்ரா ஆகியோர் நிலையான பந்து வீச்சை வெளிப்படுத்தவில்லை.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, வெற்றியையும், தோல்வியையும் மாறி, மாறி சந்தித்து வருகிறது. அந்த அணி 7 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 11 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் தொடர்ந்து ஏமாற்றம் அளித்து வருகிறார்கள். பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். எஞ்சிய பந்து வீச்சாளர்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை.

தோல்வி கண்டால் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பை இழக்க நேரிடும் என்ற நெருக்கடியுடன் டெல்லி அணி இந்த ஆட்டத்தில் களம் காணுகிறது. சரிவில் இருந்து மீண்டு சிறந்த நிலைக்கு வர வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 10 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும். தனது ஆதிக்கத்தை நீடிக்க ராஜஸ்தான் அணி முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 17 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 11 முறையும், டெல்லி அணி 6 தடவையும் வெற்றி பெற்று இருக்கின்றன. இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ‘சாம்பியன்’
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் வாட்சனின் அபார சதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை ருசித்தது. #IPL2018
2. ஐ.பி.எல். இறுதி போட்டி: சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்கு
ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஜதராபத்திற்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணிக்கு 179 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #IPL2018
3. ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று நடை பெற உள்ள ஆட்டத்தில் சென்னை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. #IPL2018
4. ஐ.பி.எல். கிரிக்கெட்: நடப்பு சாம்பியன் மும்பை அணி வெளியேற்றம்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியிடம் போராடி தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் மும்பை அணி பரிதாபமாக வெளியேறியது.
5. மும்பைக்கு அதிர்ச்சி அளிக்குமா டெல்லி?
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய முதல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.