ஐபிஎல்லில் நேரத்தை வீணடித்து வருகின்றார் மலீங்கா; இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டனம்


ஐபிஎல்லில்  நேரத்தை வீணடித்து வருகின்றார் மலீங்கா; இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டனம்
x
தினத்தந்தி 2 May 2018 12:00 PM GMT (Updated: 2 May 2018 12:00 PM GMT)

ஐபிஎல்லில் நேரத்தை மலீங்கா வீணடித்து வருகின்றார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்து உள்ளது. #IPL2018

கொழும்பு

ஐபிஎல் 2018  தொடரின் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் போட்டிகள் இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் நடைப்பெற்று வருகிறது.

தற்போது நடைப்பெற்று வரும் இந்த ஐபிஎல்  தொடரில் மும்பை அணிக்கான பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மலீங்கா செயல்பட்டு வருகின்றார். முன்னதாக இந்தாண்டிற்கான ஐபிஎல் ஏலம் பெங்களூருவில் நடைப்பெறுகையில், மலிங்காவினை மும்பை இந்தியன்ஸ் அணி உள்பட எந்த அணியும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. 

இது குறித்து உள்ளூர் ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் "இளம் வீரர்களை கொண்டு அணிகளை அமைப்பதில், ஏலத்தில் அணிகள் தீவரம் காட்டியது. எனவே என்னை ஏலம் எடுக்காதது எனக்கு வருத்தம் அளிக்கவில்லை, எனினும் கடந்தாண்டில் ஐபிஎல்  போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்தபோதிலும் இலங்கை அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காததே எனக்கு வருத்தம் அளிக்கிறது" என குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி மலிங்காவை தங்கள் அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமித்து இருப்பதாக அறிவித்தது. பின்னர் மும்பை அணியில் ஆலோசகராக அவர் நீடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இலங்கையில் உள்ளூர் போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உள்ளூர் போட்டிகளில் அவரால் விளையாட முடியாது எனவும், ஐபிஎல் தொடர் முடியும் வரை அவர் மற்ற போட்டிகளில் கலந்துக்கொள்ளப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மலீங்காவின் இந்த அறிவிப்பினை கண்டித்து இலங்கை கிரிக்கெட் தேர்வுகுழு அவருக்கு  எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இது குறித்து  டிசில்வா கூறியதாவது:-

மலிங்காவிடம்  தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நாங்கள் தெரிவித்திருக்கிறோம். அவர் இண்டர்-மாகாண போட்டியில் விளையாடவில்லை என்றாலும்  தேர்வாளர்கள் அவரைப் பரிசீலிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Next Story