கிரிக்கெட்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லேங்கர் நியமனம் + "||" + Australia to fight for 'respect', says new coach Langer

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லேங்கர் நியமனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக லேங்கர் நியமனம்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஜஸ்டின் லேங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். #JustinLanger
மெல்போர்ன்,

கடந்த மார்ச் மாதம் கேம்ப் டவுனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியது தொடர்பான விவகாரத்தில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு ஓராண்டு மற்றும் புதுமுக வீரர் பான்கிராப்ட்க்கு 9 மாதங்கள் விளையாட தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. மேலும் இந்த தவறுக்கு பொறுப்பேற்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லிமேன் பதவி விலகினார். 

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக, டெஸ்ட் போட்டியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜஸ்டின் லேங்கர் (47) நியமிக்கப்பட்டுள்ளார்.

”மே 22-ம் தேதி முதல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்கும் ஜஸ்டின் லேங்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஒரு நாள், டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் என அனைத்து போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக விளங்குவார்” என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்காக மொத்தம் 105 டெஸ்ட் மற்றும் 8 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜஸ்டின் லேங்கர், டெஸ்ட் போட்டிகளில் 23 சதங்களுடன் 7500-க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆசிரியரின் தேர்வுகள்...