கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக குறைந்த பட்ச ஊதியம் பெறும் விராட் கோலி


கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக குறைந்த பட்ச ஊதியம் பெறும் விராட் கோலி
x
தினத்தந்தி 5 May 2018 7:30 AM GMT (Updated: 5 May 2018 7:30 AM GMT)

இங்கிலாந்தின் கவுண்டி போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு குறைந்த பட்ச சம்பளம் வழங்கப்படுகிறது. #CountyKohliSalary

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்கும் விராட் கோலி, உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். 

விராட் கோலி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிபடுத்திய போதும், இங்கிலாந்து மண்ணில் இதுவரை கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியதில்லை. 

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள், டி20 தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இத்தொடர்களில் வெற்றி பெற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பெரும் முனைப்புடன் உள்ளது.

இதனிடையே கோலி இங்கிலாந்து மண்ணில் தனது திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள கவுன்டி போட்டியில் விளையாட முடிவு செய்தார்.

இதன்படி இங்கிலாந்தின் முன்னணி கவுன்டி அணியான சர்ரே, விராட் கோலியை ஒப்பந்தம் செய்துள்ளது. விராட் கோலி ஜூன் மாதம் முழுவதும் அந்த அணிக்காக விளையாட இருக்கிறார். கவுண்டி போட்டியில் விளையாடும் விராட் கோலி 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று நாட்கள் நடைபெறும் 4 தொடர்களில் விளையாட இருக்கிறார். 

உலகிலேயே அதிக சம்பளம் பெறும் வீரர்களில் ஒருவரான விராட் கோலிக்கு, கவுண்டி போட்டியில் விளையாட குறைந்த பட்ச சம்பளம் வழங்கப்படுவது தற்போது தெரிய வந்துள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கோலிக்கு ரூ. 18 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story