கிரிக்கெட்

ஐபிஎல் பெங்களூருக்கு எதிரான போட்டி சென்னை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு அணிகளில் தலா 2 மாற்றங்கள் + "||" + IPL 2018 LIVE Cricket Score, CSK vs RCB: Chennai Win Toss, Opt to Bowl; ABD Returns for Bangalore

ஐபிஎல் பெங்களூருக்கு எதிரான போட்டி சென்னை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு அணிகளில் தலா 2 மாற்றங்கள்

ஐபிஎல் பெங்களூருக்கு எதிரான போட்டி சென்னை டாஸ் வென்று பீல்டிங் தேர்வு  அணிகளில் தலா 2 மாற்றங்கள்
பெங்களூருக்கு எத்ரான போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு அணிகளில் தலா 2 மாற்றங்கள் செய்யபட்டு உள்ளது. #CSKvRCB #VIVOIPL

சென்னை - பெங்களுர் இடையேயான ஐபிஎல் ஆட்டம் இன்று புனேவில் நடைபெறுகிறது

சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு  செய்தார்..ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்பேட்டிங் செய்கிறது

காய்ச்சல் காரணமாக கடந்த இரு ஆட்டங்களில் விளையாடாத டிவில்லியர்ஸ் இன்றைய ஆட்டத்தில் இடம்பெற்றுள்ளார். இந்த வருட ஐபிஎல் ஆட்டத்தில் டி வில்லியர்ஸ் 280 ரன்கள் எடுத்துள்ளார். அதேசமயம் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக், ஒரு திருமணத்துக்குச் செல்லவேண்டியிருப்பதால் தென் ஆப்பிரிக்காவுக்குப் பறந்துள்ளார்.

சென்னையில் அணியில் மூன்று மாற்றங்கள். டுபிளெஸ்ஸிஸ், கரண் சர்மா, ஆசிஃப் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்குப் பதிலாக முரளி விஜய், துருவ் ஷோரே, டேவிட் வில்லி இடம்பெற்றுள்ளார்கள். வில்லி, ஷோரே ஆகிய இருவரும் ஐபிஎல்-லில் இந்த ஆட்டத்தின் மூலமாக அறிமுகமாகியுள்ளார்கள். கடந்த ஆட்டத்தில் மோசமாக விளையாடி விமரிசனங்களுக்கு ஆளான ஜடேஜா, அணியில் நீடிக்கிறார்.

அதேபோல பெங்களூர் அணியிலும் மூன்று மாற்றங்கள். டி காக், வோரா, வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக டி வில்லியர்ஸ், பார்தீவ் படேல், எம். அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.