கிரிக்கெட்

20 ஓவர் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் விளாசி ரோகித் சர்மா சாதனை + "||" + Over 20 cricket 300 Sixes blast Rohit Sharma record

20 ஓவர் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் விளாசி ரோகித் சர்மா சாதனை

20 ஓவர் கிரிக்கெட்டில் 300 சிக்சர்கள் விளாசி ரோகித் சர்மா சாதனை
முதல் சிக்சரை அடித்ததும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.
இந்தூர்,

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 17-வது ஓவரில் முஜீப் ரகுமான் பந்து வீச்சில் 2 சிக்சர்கள் விளாசினார். முதல் சிக்சரை அடித்ததும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 300 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார்.


279-வது போட்டிகளில் ஆடி 301 சிக்சர் அடித்து ரோகித் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார். சர்வதேச அளவில் எல்லா வகையான 20 ஓவர் போட்டியிலும் சேர்த்து 300 சிக்சர்கள் அடித்த 7-வது வீரர் ரோகித் சர்மா ஆவார். 20 ஓவர் போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர்கள் வரிசையில் கிறிஸ் கெய்ல் (844 சிக்சர்கள்) முதலிடத்திலும், பொல்லார்ட் (525) 2-வது இடத்திலும், பிரன்டன் மெக்கல்லம் (445) 3-வது இடத்திலும், வெய்ன் சுமித் (367) 4-வது இடத்திலும், ஷேன் வாட்சன் (357) 5-வது இடத்திலும், டேவிட் வார்னர் (319) 6-வது இடத்திலும் உள்ளனர்.