கிரிக்கெட்

சூா்யகுமாரின் அதிரடியால் கொல்கத்தா அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை + "||" + mumbai set the target of 182 for culcutta

சூா்யகுமாரின் அதிரடியால் கொல்கத்தா அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை

சூா்யகுமாரின் அதிரடியால் கொல்கத்தா அணிக்கு 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது மும்பை
11வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 182 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. #IPL2018
மும்பை,

11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இன்று பகல்-இரவு  ஆட்டமாக நடந்து வரும் போட்டியில் ரோகித் ‌ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்- தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த 37வது லீக் ஆட்டம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. மேலும், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்து வீச்சை தோ்வு செய்தார். இதன் பின்னா் களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரா்கள் எவின் லீவீசும் சூர்யகுமார் யாதவ் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தனா். இந்த ஜோடியின் ரன் வேட்டையின் மூலம் 91 ரன்களை இருவரும் இணைந்து எடுத்திருந்தனா். பின்னா் ரசுல் பந்தில் கேட்ச் கொடுத்து எவின் லீவிஸ் 43 (28 பந்துகள்)அரை சதத்தை தொடாமல் சென்றார். அடுத்து ஆட வந்த கேப்டன் ரோகித் சா்மாவும் 11(11 பந்துகள்) வந்தவுடன் கேட்ச் கொடுத்த பெவிலியன் திரும்பினார். 

இவரை தொடா்ந்து ஹர்திக் பாண்ட்யா சூா்யகுமாருடன் இணைந்த சில நொடிகளில் சூா்யகுமார் 59(39 பந்துகள்) ரசுல் பந்தில் வெளியேறினார். பின்னா் வந்த குா்ணல் பாண்டியா14(11 பந்துகள்) சுனில் நரேன் பந்தி்ல் தூக்கி அடித்து வெளியேறினார். இவரை தொடா்ந்து கடைசி ஓவா்களை விளையாட டுமினி களமிறங்கினா். ஹா்திக் பாண்டியா 35 ரன்களுடனும் டுமினி 13 ரன்களுடனும் களத்தில் நின்றிருந்தனா்.

கொல்கத்தா அணி சார்பில் ரசுல் மற்றும் நரேன் இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திருந்தனா். இந்நிலையில் ஒதுக்கப்பட்ட 20 ஓவா்களில் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை சோ்த்தது.