கிரிக்கெட்

ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி + "||" + Sunrisers Hyderabad won by 5 runs

ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி

ஐபிஎல்: ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி
ஐபிஎல் போட்டியில் 39-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியிடம் வீழந்தது. #IPL
ஐதராபாத்,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஐதராபாத்தில் நடைபெறும் 39-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதின. கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் அணி 9 ஆட்டத்தில் ஆடி 7 வெற்றி, 2 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 4 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது இல்லை.

விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி 9 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் பின்தங்கிய நிலையில் உள்ளது. எஞ்சிய லீக் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் பெங்களூரு அணி இன்றையை போட்டியை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷ்கர் தவான் மற்றும் அலெக்ஸ் களமிறங்கி விளையாடினர். 2 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 14 ரன்களை எடுத்து இருந்தது. ஷகர் தவான் 7 ரன்களுடனும், அலெக்ஸ் 5 ரன்களுடனும் விளையாடினர். 

இருவரும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்தார்கள், ஆனால் பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர் சவுதி விடவில்லை, அலெக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதனையடுத்து 5.5 வது ஓவரில் தவான் 13 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து ஐதராபாத் அணியில் களமிறங்கியவர்களில் வில்லியம்ஸன் (56 ரன்கள்) மற்றும் ஷகிப் அல் ஹசன் (35 ரன்கள்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட் ஆனார்கள். மற்றவர்கள் சொல்லும்படியாக ரன் எதுவும் எடுக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 10 விக்கெட்கள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. 

பின்னர் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோக்ரா மற்றும் பார்திவ் படேல் ஆகியோர் களமிறங்கினர். பெங்களூரு அணியின் ஸ்கோர் 24 ரன்களாக இருந்த போது ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் எல்பிடபுள்யூ ஆகி பார்திவ் படேல் (20 ரன்கள்) வெளியேறினார். அடுத்ததாக கேப்டன் விராட் கோலி மைதானத்திற்குள் நுழைந்தார். மனன் வோக்ராவுடன் இணைந்து தனி ஒருவனாக விராட் கோலி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினார். இதனிடையே மனன் வோக்ரா 8 ரன்களில் வெளியேற, ஏபிடி வில்லியர்ஸ் களம் கண்டார்.

ஆட்டத்தின் 9.5-வது ஓவரில் அணியின் ஸ்கோர் 74-ஆக இருக்க ஷகிப் அல் ஹசன் பந்து வீச்சில் கேட்ச் ஆகி கேப்டன் கோலி (39 ரன்கள்) வெளியேறினார். சிறிது நேரத்தில் டி வில்லியர்ஸூம் வெறும் 5 ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்க, மொயின் அலியும் 10 ரன்களில் நடையை கட்டினார். இதனால் பெங்களூரு அணி 84 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது. இந்நிலையில் மன்தீப் சிங் மற்றும் கோலின் டி கிராந்தோமி ஆகிய இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்டனர். இருவரும் ஐதராபாத் அணியின் நேர்த்தியான பந்து வீச்சை மிக துல்லியமாக எதிர்கொண்டு பொறுப்புடன் விளையாடி வந்தனர். இந்நிலையில் கடைசி 6 பந்துகளில் பெங்களூரு அணி வெற்றி பெற 12 ரன்கள் தேவைப்பட்டது. 

கடைசி ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார், பொறுப்புடன் பந்து வீசி ரன்களை மிக சிக்கனமாக விட்டுகொடுத்தார். பெங்களூரு அணி இறுதிப்பந்தில் சிக்ஸர் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இருக்க, கடைசி பந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து வீரர் கோலின் டி கிராந்தோமி, புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதனால் பெங்களூரு அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது. ஐதராபாத் அணியின் சார்பாக ஷகிம் அல் ஹசன் 2 விக்கெட்டுகளையும், சித்தார்த் கவுல், ரஷித் கான், புவனேஷ்வர் குமார் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இவ்வெற்றியின் மூலம் பிளே ஆஃப் சுற்றில் விளையாடும் வாய்ப்பை ஐதராபாத் அணி உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியின் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை ஜெய்ப்பூரில் எதிர்கொள்கிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...