கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? இன்று மோதல் + "||" + IPL Cricket Will the Punjab team respond Rajasthan Confrontation today

ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான்? இன்று மோதல்
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ப்பூரில் இன்று இரவு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.
ஜெய்ப்பூர்,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் ஜெய்ப்பூரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் 40-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 9 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணி தனது கடைசி 3 லீக் ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தது. இந்தூரில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வி கண்டு இருந்தது. இந்த நிலையில் ஒருநாள் இடைவெளியில் இரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன.


ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் கேப்டன் ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ராகுல் திரிபாதி ஆகியோர் எதிர்பார்ப்புக்கு தகுந்தபடி செயல்படவில்லை. கடந்த லீக் ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 51 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தபடியாக சஞ்சு சாம்சன் 28 ரன்கள் சேர்த்தார். மற்ற எந்த பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கிருஷ்ணப்பா கவுதம், ஜெய்தேவ் உனட்கட், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோர் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்.

ஆர்.அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 9 ஆட்டத்தில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்திய நம்பிக்கையுடன் பஞ்சாப் அணி இந்த ஆட்டத்தில் களம் காணும்.

பஞ்சாப் அணி பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், கெய்லை அதிகம் நம்பி இருக்கிறது. மயங்க் அகர்வால், கருண்நாயர், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ஆர்.அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், முஜீப் ரகுமான், ஆன்ட்ரூ டை ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

இந்த ஆட்டம் ராஜஸ்தான் அணிக்கு வாழ்வா-சாவா? ஆட்டமாகும். இதில் தோல்வி கண்டால் ராஜஸ்தான் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பட்டு போய்விடும். எனவே ராஜஸ்தான் அணி முந்தைய தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுத்து அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க எல்லா வகையிலும் போராடும். பஞ்சாப் அணி புள்ளி பட்டியலில் மேலும் முன்னேற்றம் காண முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. ஐ.பி.எல். போட்டி வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் ராஜஸ்தான் அணி 9 முறையும், பஞ்சாப் அணி 7 தடவையும் வென்று இருக்கின்றன.