கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு + "||" + Cricket against England: Australian team announcement

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

மெல்போர்ன்,

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து தொடர்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அடுத்த மாதம் (ஜூன்) 13–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 5 ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

இதனை அடுத்து ஜூன் 1–ந் தேதி முதல் ஜிம்பாப்வேயில் நடைபெறும் 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி பங்கேற்கிறது. 3–வது அணியாக பாகிஸ்தான் கலந்து கொள்கிறது.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணிக்கு டிம் பெய்ன் கேப்டன்

இந்த இரண்டு போட்டி தொடர்களுக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டு இருப்பதால் ஒருநாள் அணியின் கேப்டனாக டிம் பெய்னும், 20 ஓவர் அணியின் கேப்டனாக ஆரோன் பிஞ்சும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் நிரந்தர கேப்டன் விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய ஒருநாள் அணி: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் பிஞ்ச், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், நாதன் லயன், மேக்ஸ்வெல், ஷான் மார்ஷ், ஜே ரிச்சர்ட்சன், கனே ரிச்சர்ட்சன், டார்சி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், ஆன்ட்ரூ டை.

20 ஓவர் அணிக்கு ஆரோன் பிஞ்ச் கேப்டன்

ஆஸ்திரேலிய 20 ஓவர் அணி: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், டிராவிஸ் ஹெட், நிக் மேடின்சன், மேக்ஸ்வெல், ஜே ரிச்சர்ட்சன், கனே ரிச்சர்ட்சன், டார்சி ஷார்ட், பில்லி ஸ்டான்லேக், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் வெப்சன், ஆன்ட்ரூ டை, ஜாக் வில்டெர்முத்.



தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் மீண்டும் பயங்கரம்: உணவகத்தில் 2 பேர் மீது நச்சுப்பொருள் தாக்குதல்
இங்கிலாந்து உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ரஷியர் உள்பட 2 பேர் மீது நச்சுப் பொருள் தாக்குதல் நடத்தப்பட்டது.
2. ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்–ஹாங்காங் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கை இன்று எதிர்கொள்கிறது.
3. மொயீன் அலியை ‘ஒசாமா’ என்று ஆஸ்திரேலிய வீரர் விமர்சித்ததாக புகார் கிரிக்கெட் வாரியம் விசாரணை
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை, ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஒசாமா என்று விமர்சித்ததாக புகார் எழுந்துள்ளது.
4. ‘சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் திட்டம் இல்லை’ இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் பேட்டி
‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் திட்டம் எதுவும் இல்லை’ என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்தார்.
5. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் நீடிப்பு இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேற்றம்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை இழந்தாலும் இந்திய அணி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறது. தொடரை வென்ற இங்கிலாந்து அணி 4–வது இடத்துக்கு முன்னேறியது.