கிரிக்கெட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் கருண்நாயர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சித்தார்த் கவுல் இடம் பிடித்தார் + "||" + Test against Afghanistan: Karunanayar in the Indian team

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் கருண்நாயர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சித்தார்த் கவுல் இடம் பிடித்தார்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் கருண்நாயர் அயர்லாந்து, இங்கிலாந்து தொடரில் சித்தார்த் கவுல் இடம் பிடித்தார்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கருண்நாயர் இடம் பிடித்துள்ளார்.

பெங்களூரு,

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கருண்நாயர் இடம் பிடித்துள்ளார். இதேபோல் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்கான அணியில் சித்தார்த் கவுலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்

இந்தியா–ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் ஜூன் 14–ந் தேதி முதல் 18–ந் தேதி வரை நடக்கிறது. ஜூன் மாத கடைசியில் அயர்லாந்து செல்லும் இந்திய அணி அந்த நாட்டு அணியுடன் இரண்டு 20 ஓவர் போட்டியில் (ஜூன் 27, 29–ந் தேதி) ஆடுகிறது. இதைத்தொடர்ந்து இந்திய அணி, இங்கிலாந்தில் பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 3–ந் தேதி முதல் 17–ந் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த 3 போட்டி தொடர்களுக்கான இந்திய கிரிக்கெட் அணி தேர்வு பெங்களூருவில் நேற்று நடந்தது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி இந்திய அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

ரஹானே கேப்டன்

இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி போட்டியில் சுர்ரே அணிக்காக விளையாட இருக்கும் இந்திய அணி கேப்டன் விராட்கோலி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த 26 வயதான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர் அணியில் இடம் பிடித்துள்ளார். அவர் 14 மாத இடைவெளிக்கு பிறகு அணியில் இடம் பெற்றுள்ளார். கருண்நாயர் டெஸ்ட் போட்டியில் 2 முறை முச்சதம் அடித்து அசத்தியவர் ஆவார். டெஸ்ட் அணியின் கேப்டனாக ரஹானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மா டெஸ்ட் அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். தமிழக வீரர்கள் ஆர்.அஸ்வின், எம்.விஜய் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–

ரஹானே (கேப்டன்), ஷிகர் தவான், எம்.விஜய். லோகேஷ் ராகுல், புஜாரா, கருண் நாயர், விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ‌ஷமி, ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ‌ஷர்மா, ‌ஷர்துல் தாகூர்.

சித்தார்த் கவுலுக்கு அதிர்ஷ்டம்

அயர்லாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் கேப்டன் விராட்கோலி விளையாடுகிறார். ரஹானேவுக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. பஞ்சாப்பை சேர்ந்த 27 வயது வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் கவுல் அறிமுக வீரராக இடம் பிடித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக பந்து வீச்சில் அசத்தி வரும் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரிலும் அவருக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்து இருக்கிறார்கள். அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–

விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.

20 ஓவர் அணியில் மாற்றமில்லை

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில், அயர்லாந்துடனான 20 ஓவர் போட்டி தொடரில் இடம் பிடித்துள்ள வீரர்கள் எந்தவித மாற்றமும் இன்றி அப்படியே இடம் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டேவுக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பேட்டிங்கில் அசத்தி வரும் 32 வயதான அம்பத்தி ராயுடு ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். அம்பத்தி ராயுடு 2016–ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு பிறகு முதல்முறையாக ஒருநாள் அணிக்கு திரும்பி இருக்கிறார். லோகேஷ் ராகுல் மீண்டும் ஒருநாள் அணியில் இடம் பிடித்து இருக்கிறார்.

ஒருநாள் அணி வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–

விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், அம்பத்தி ராயுடு, டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, சித்தார்த் கவுல், உமேஷ் யாதவ்.


ஆசிரியரின் தேர்வுகள்...