கிரிக்கெட்

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு + "||" + Match 41. Kolkata Knight Riders win the toss and elect to field

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பந்து வீசுகிறது. #IPL #MI #KKR
கொல்கத்தா,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இரவு நடைபெறும் 41–வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி, 5 தோல்வி கண்டுள்ளது. பெங்களூரு, சென்னை அணிகளை தொடர்ச்சியாக வீழ்த்திய கொல்கத்தா அணி, மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தனது கடைசி லீக் ஆட்டத்தில் 13 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்தது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்வி கண்டுள்ளது. கடைசியாக பெங்களூரு அணியிடம் தோல்வி கண்ட மும்பை அணி அடுத்து வரிசையாக பஞ்சாப், கொல்கத்தா அணிகளை சாய்த்து வெற்றி கண்டது.

மும்பை அணிக்கு இது முக்கியமான ஆட்டமாகும். இதில் தோல்வி கண்டால் அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு அம்பேல் ஆகக்கூடும். எனவே வெற்றிக்காக மும்பை அணி கடுமையாக போராடும். மும்பையிடம் முந்தைய லீக் ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு சொந்த மண்ணில் பழிதீர்க்க கொல்கத்தா அணி முழு வீச்சில் செயல்படும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், மும்பை இந்தியன்ஸ் அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.