கிரிக்கெட்

தனது மனம் கவர்ந்த முதல் பெண் யார்? ரகசியம் வெளியிட்ட தோனி, சாக்‌ஷியிடம் சொல்ல வேண்டாம் என நகைச்சுவை பேச்சு + "||" + IPL 2018: MS Dhoni Reveals His First Crush, Says Don't Tell Sakshi

தனது மனம் கவர்ந்த முதல் பெண் யார்? ரகசியம் வெளியிட்ட தோனி, சாக்‌ஷியிடம் சொல்ல வேண்டாம் என நகைச்சுவை பேச்சு

தனது  மனம் கவர்ந்த  முதல் பெண் யார்? ரகசியம் வெளியிட்ட தோனி, சாக்‌ஷியிடம் சொல்ல வேண்டாம் என நகைச்சுவை பேச்சு
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி, தனது மனம் கவர்ந்த முதல் பெண் யார் என்ற ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார். #Dhoni #IPL
புனே,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான தோனி, தனது மனம் கவர்ந்த முதல் பெண் யார் என்ற ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார். 

கொஞ்சம் அமைதியான சுபாவம் கொண்டவராக அறியப்படும் தோனி, பொதுவாக தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலை அவ்வளவாக பொதுவெளியில் பகிரமாட்டார். மிக அரிதாகவே, தோனியிடம் இருந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலை எதிர்பார்க்கலாம். அந்த வகையில்,  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனியிடம்,  நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர், உங்கள் மனம் கவர்ந்த முதல் பெண் யார் என்ற கேள்வியை முன்வைத்தார். 

முதலில் சற்று தயங்கிய  தோனியை மேலும், அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அவரின் மனம் கவர்ந்த பெண் குறித்த தகவலை தானே கண்டறிவதாகவும் குறிப்பிட்டு சில கேள்விகளை மட்டும் தோனியிடம் கேட்டார். அதன் மூலம் அந்த பெண் யார் என்பதை அவரே கூறுவதாகவும் குறிப்பிட்டார்.

தோனியின் மனம் கவர்ந்த முதல் பெண்ணின் பெயரில் இடம் பெற்றிருக்கும் எழுத்துக்களின் வரிசையை அவர் கூறினார், இறுதியில் தன் மனதை கவர்ந்த முதல் பெண்ணின் பெயர் ‘ஸ்வாதி’ எனவும் இது குறித்து தன் மனைவி ஷாக்‌ஷியிடம் கூறி விடாதீர்கள் என்று நகைச்சுவையாகக் கூறினார்.  மேலும், 1999 ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படிக்கும் போது கடைசியாக தான் ஸ்வாதியை பார்த்ததாகவும் தோனி கூறினார்.