கிரிக்கெட்

கிரேடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஐசிசி அனுமதி + "||" + Steve Smith, David Warner Cleared To Return To Club Cricket In Australia

கிரேடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஐசிசி அனுமதி

கிரேடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஐசிசி அனுமதி
கிரேடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஸ்டீவ் ஸ்மித், வார்னருக்கு ஐசிசி அனுமதி அளித்துள்ளது. #ICC #Smith #Warner
துபாய்,

தென் ஆப்பிரிக்காவில் ஆஸ்திரேலிய  கிரிக்கெட்  அணி சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.  இந்த தொடரில், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3–வது டெஸ்டில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தலா ஓராண்டு விளையாட தடையும், இன்னொரு வீரர் கேமரூன் பான்கிராப்ட்டுக்கு 9 மாதங்கள் தடையும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விதித்தது. அதேபோல், ஐபிஎல் தொடரில் இருந்தும் வார்னர், ஸ்மித் கழற்றி விடப்பட்டனர். 

இந்த நிலையில், ஸ்மித் மற்றும் வார்னர் ஆகிய இருவரும் கிரேடு கிரிக்கெட்டுகளில் விளையாட ஐசிசி அனுமதி அளித்துள்ளது. ஸ்மித், வார்னர் ஆகிய இரு வீரர்களும் தங்களுக்கான கிளப் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம் என்று ஐசிசி தெரிவித்து உள்ளது.  

இரு வீரர்களும் சிட்னி கிளப் போட்டிகளில் விளையாடுவார்கள் என்று தெரிகிறது. ஸ்மித், வார்னர் ஆகிய இருவீரர்களும் நடப்பு சீசனில் கிரேடு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை தடுக்க போவது இல்லை என்று நியூ சவுத் வேல்ஸ் கிரிக்கெட் வாரியமும் தெரிவித்து உள்ளது.